தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

7/10/2010

இப்படியும் கவிதை எழுதுறாய்ங்கப்பா ?ஏதோ கவிதை எழுதுவது காதல் பற்றியோ, இல்லை சமூக அவலங்களோ இல்லை சீர்திருத்தமோ இல்லை சொந்த சோகமோ இருக்கவேண்டும் என்பது கவிதையின் எழுதாத விதியோ என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு சமீபத்தில் படித்த கவிதை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. எதை வேண்டுமானாலும் வைத்துக் கவிதை எழுதலாம்.


இதைப் படித்து எனக்குள் நான் சிரித்ததைக் கண்டு என் நண்பர்  “ உங்களுக்கு என்ன ஆச்சு தானே சிரிக்கீற  ?” என்ற நக்கல் என் சிரிப்பை நிறுத்தவில்லை.


அந்தக் கவிதை இதுதான், இணையதளில்  படித்தது.


கால்விரல்களின் நகத்தை வெட்ட
காலை மடக்கி பாதம் தொட,
சாக்சும், ஷூ லேசும் கட்ட
கஐகர்ணம் போட வைக்கிறாயே!


ரேஷன் கடை க்யூவானாலும்
சினிமா டிக்கெட் எடுக்கும்
வரிசையிலும்
பேருந்து ஸ்டான்டிங்கில்
பயணிக்கும் போதும்
யோவ்! உனக்கு முன்னால
எவ்….. வளவு கேப் என பிறர்
முறைக்கப் காரணம் நீ தானே!


மல்லாந்து படுத்தால் மலை மாதிரியும்
பக்கவாட்டில் படுத்தால் அருகில்
பாப்பாவாகி
குப்புறப்படுக்க விடாமல்
கொடுமை செய்து
குலுங்கிச் சிரித்தால் பிறரையும்
குலுங்க வைக்கிறாயே!
இருப்பினும் உன்னால்
எனக்கு உதவிதான்,
இருக்கும் இடத்தில் உன்னை
டேபிளாகவும்,
இரு கைகளுக்கு ரெஸ்ட் ஸ்டாண்ட்
ஆகவும்,
ஹெல்மெட்டுக்கு நல்ல
ஷெல்பாகவும்….
ஐ லௌவ் யூ ஸோ மச் தொப்பை!.


எழுதியது யார் தெரியவில்லை?
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

சுட்டது & இடுக்கை :அ.ராமநாதன்

கருத்துகள் இல்லை: