தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

7/12/2010

கண்டிப்பாக படியுங்கள் மனிதம் இருந்தால்1984-ம் ஆண்டு திசம்பர் 2ம் நாள். அப்போது நான் பிறக்க  29 நாட்கள் இருந்தது. ஒரு வேலை நான் போபாலில் பிறந்திருந்தால் அந்த நாளே என் வாழ்க்கை முடிந்து போயிருக்கும் என்னைப் போல் பிறந்த குழந்தைகளுடன் சேர்த்து 22,146 பேர் மரணமும் வெறும் விபத்தாகப் பார்க்கப் படுவது அபத்தமான ஒன்று.


இவையெல்லாம் முதலாளிகளின் இலாப வெறிக்கு நடத்தப் பட்ட படுகொலைகள். இவற்றை விபத்தாகப் பார்க்கும் எண்ணம் நம் மக்களிடம் பரவியிருப்பது கொடுமையான விடயம். விளம்பர ஊடகங்களை வைத்து மக்கள் உணர்வுகள் அனைத்தும் வெறும் செய்திகளாக மாற்றப் பட்டிருப்பது எவ்வளவு கொடூரமான செயல்?


தான் ஏன் இப்படி இறந்து போகிறோம்? என்பதைக் கூட உணர முடியாமல் நடு ரோட்டிலும், இரயில் நிலையங்களிலும் பிணமாகிப் போனவர்கள் விபத்தால் இறந்தவர்கள் என்று சொல்வது மனிதம் மறைக்கும் பாதக செயல். இந்த விபத்துக்கெல்லாம் முக்கியக் காரணம் கவன்க் குறைவோ அல்லது சாதாரண விபத்தோ அல்ல.


முதலாளிகளின் வெறி கொண்ட இலாப நோக்கு. இது மட்டுமேக் காரணம். போபால் ஆலையில் கார்பரில் என்ற பூச்சி மருந்து தயாரிக்கப் பட்டு "செவின்" எனப் பெயரிடப் பட்டு  விற்பனைக்கு வெளிவந்திருக்கிறது. இந்த மருந்தைத் தயாரிக்க மாற்று வழிகள் நிறைய இருந்தும் "மெத்தில் ஐசோ சயனைடு" என்ற நச்சுப் பொருளை விலை மலிவு என்ற ஒரே காரணத்தை மனதில் கொண்டு இலாப நோக்கில் பயன்படுத்தியது இந்த முதலாளிகளின் குற்றமா? அல்லது விபத்தா?


ஆனால் இந்த மருந்து விவசாயிகளிடம் ஆதரவு பெறவில்லை. அதைத் தொடர்ந்து 1980-களில் நிலவிய வறட்சியின் காரணமாகவும் இந்த மருந்து தோல்வியைத் தழுவியது. இதனால் இலாபக் குறைவைத் தடுக்க அந்த முதலாளிகளால் முடிவெடுக்கப் பட்டு அங்கு உள்ள எந்திரங்களின் பராமறிப்பு செலவுகள் நிறுத்தப் பட்டன.


மேலும் சம்பவம் நடந்த அன்று இந்த ஆலையில் இந்த "மெத்தில் ஐசோ சயனைடு" வாயுவை மூன்று பெரிய கலன்களில் சேமித்து வைத்திருந்திருக்கிறார்கள். இந்த நச்சுத் திரவம் குளிரூட்டப் பட்ட இடத்திலோ அல்லது உறை நிலையிலோ பாதுகாக்கப் பட வேண்டும். ஆனால் இந்த நிறுவனம் "காஸ்ட் கட்டிங்" (செலவைக் குறைத்து இலாபத்தை அதிகரிப்பது) என்று சொல்லி குளிர் காலம் என சொல்லி குளிர் சாதனத்தை அணைத்து வைத்திருந்திருக்கிறது.


ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த கலன்களின் அழுத்தம் சோதிக்கப் பட வேண்டும். ஆனால் இங்கு 8 மணி நேரத்திற்கு ஒரு முறை சோதிக்கப் பட்டிருக்கிறது. 10:12 மணிக்கு சோதனை செய்த போது சரியாக இருந்த அழுத்தம் 11.30 மணிக்கு குளிர் சாதனம் இயக்கப் படாததால் 0 டிகிரியில் இருக்க வேண்டிய வெப்ப நிலை 250 டிகிரியைத் தொட்டு வெடித்து சிதறி 22,146உயிர்களை கொன்று, 500000 க்கும் மேற்பட்டவர்களை முடமாக்கியதுடன் இன்றும் அங்கு பிறக்கும் குழந்தைகள் குறை பாடுகளுடன் பிறந்து வருகின்றனர்.


இவற்றையெல்லாம் விபத்து என சொல்லி மிகக் குறைந்த அளவு நஷ்ட ஈட்டை 25 வருடங்களுக்குப் பிறகு வழங்குவதற்கு உத்தரவிட்டிருக்கும் இந்திய அரசியலமைப்பை என்னவென்று சொல்வது? முதலாளிகளுக்கு கொடி பிடித்து மக்களை கொன்று குவிக்கும் பணி சிறப்பாக நடந்து வருவது என்ன கொடுமை?


இந்த மனித ஆழிப்பு நிகழ்வுகள் எல்லாம் வெறும் செய்தியாக பார்த்து தலைப்புடன் நிறுத்தி விட்டு சினிமா செய்திப் படித்துக் கொண்டிருந்தவன் தான் நான். புதிய ஜனநாயகம் புத்தகத்தில் இது பற்றிய செய்திகளைப் படித்ததும் அதிர்ந்து போனேன். அதை என் பதிவைப் படிப்பவர்களுக்காவது புரிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த போபால் தொடரைத் துவக்கியுள்ளேன். இன்னும் அங்கு நடந்துள்ள நடந்து கொண்டிருக்கும் முதலாளிகளின் அக்கிரம ஆட்டத்தை அடுத்தடுத்தப் பதிவுகளில் விவாதிக்க விரும்புகிறேன்.


வாருங்கள் விவாதிக்கலாம்.
நன்றி: புதிய ஜனநாயகம்          இடுக்கை :அ.ராமநாதன்

4 கருத்துகள்:

sangeetha சொன்னது…

மிக்க நன்றி தோழரே ....

நீண்ட நாட்களாக தேடிய உண்மை சம்பவம் (தமிழில்) கண்டிப்பாக விவாதிப்போம்...

தலைப்பு அருமை " கண்டிப்பாக படியுங்கள் மனிதம் இருந்தால்"

suryadeva சொன்னது…

நண்பரே .....நான் அதே நாளில் தான் பிறந்தேன்....ஆனால் தமிழகத்தில்
நன்றி சொல்லியாக வேண்டும் கடவுளுக்கு

ramanathan சொன்னது…

நன்றி தோழி, தங்களின் மேலான விவாதங்களை வரவேற்கிறோம்...

அ.ராமநாதன் சொன்னது…

வருகைக்கு நன்றி நண்பா

கடவுளுக்கு நன்றி ? அவர்களை(முதலாளி) காப்பற்றியதற்காகவா....

அவர்களை தண்டிக்க கடவுளை ஒருசேர பிரார்த்தனை செய்வோம்