தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

12/25/2010

நம் மதம்

         இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பிறக்கும் போதே ஒரு அடையாளத்துடன் தான் பிறக்கின்றோம் முதலில் நாம் அறியப்படும் போது நமது அப்பாவின் பெயராலும் அம்மாவின் பெயரால் மட்டுமே இந்த சமுதாயத்தில் நாம் அறியப்படுகிறோம் பின்னர் நாம் வளர வளர நம்மை சாதி என்கிற அடையாளத்தோடு காணப்படுகிறோம் பின்னர் மதத்தின் அடிப்படையில் அறியப்படுகிறோம் இவையெல்லாம் ஒவ்வொரு நேரத்தில் நாம் ஒவ்வொரு விதமாக நம்மை இந்த சமுதாயம் அடையாளப்படுத்துகிறது நான் இப்போது எழுதப்போவது மதம் அதாவது கடவுளை பற்றித்தான்.
           இந்த கடவுளை சுற்றித்தான் எத்தனை விதமான உருவங்கள் எத்தனை பிரிவுகள் , இந்து, கிறிஸ்து, இஸ்லாம், புத்தம் இன்னும் எத்தனை எத்தனையோ கடவுள்கள் அதில் எத்தனையோ கொள்கைகள் நான் ஒரு இந்து ஆனால் இந்த இந்து மதத்தில் தான் எத்தனை கடவுள்கள் எத்தனை விதமான வழிபாட்டு முறைகள் இருக்கின்றன அதுபோல கிறிஸ்து, இஸ்லாம் மதத்தை எடுத்துக்கொண்டாலும் அதில்தான் எத்தனை பிரிவுகள், வழிபாட்டு முறைகள் இருக்கின்றன?
         நாம் எல்லோரும் வழிபடும் முறையும் வழிபடும் உருவமும் வெவ்வேறானதாக இருக்கிறது ஆனால் ஒவ்வொரு மத புத்தகத்திலும் நமக்கு சொல்ல வருவது என்னவோ ஓரே மாதிரியான கருத்துகள் தான் என்ன இந்து மதத்தை பொருத்த வரை பகவத் கீதை எனும் நூல் இருக்கிறது இதில் பகவான் ஸ்ரீகிருஷ்ண்ர் போர்களத்தில் உபதேசிப்பதாய் உள்ளது அதை அடிப்படையாக வைத்துதான் பகவத்கீதை எழுதப்பட்டது என நினைக்கிறேன் இந்த மதமே சிந்து சமவெளி நாகரீகத்தின் வழியாக வந்ததாம் அதாவது பாரசீக மொழியில் 'ச' என்கிற எழுத்து 'ஹ' என அழைத்து அதன் வழியாக ஹிந்து என பெயர் வந்ததாக அறியப்படுகிறது இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஐரோப்பிய அறிஞர்கள், இந்து மதம் கிறிஸ்து மதம் தோன்றும் முன்பாக சுமார் 1500 வருடங்களுக்கு முந்தையதாக இருக்கலாம் என்கிறார்கள் ஆனால் வரலாற்று தகவல்களோ சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக கல்வெட்டு சாட்சி அளிக்கின்றன, பழங்கால மதங்களில் இன்னமும் அழிந்து விடாத மதமாக இருப்பது இந்து மதம் தான் அழியாமல் இருப்பதன் ஒரு காரணம் புதிய கருத்துகளை தினித்தாலும் ஏற்றுக்கொள்ளல்தான் இதன் சிறப்பு இதில் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது அதாவது இந்து மதத்தை முன்னுக்கு பின்னான முரன்பாடன தகவல்கள் நிறைய இருந்தாலும் அவை யாவும் மக்களை குழப்புவதற்கு பதிலாக இறையுணர்வை தூண்டுவதாக இருப்பதை உணரலாம். இதில் ஒரு சாரார் மாமிசம் சாப்பிடுவதில்லை காரணம் கடவுள் பெயர் சொல்வார்கள் ஆனால் அதே நேரத்தில் பெரும்பாண்மையான் மக்கள் அதே மாமிசத்தை கடவுளுக்கு படைத்து தானும் உண்கின்றனர்.
      அடுத்ததாக கிறிஸ்து மதம் இந்த கிறிஸ்து மதத்தை அப்படி எளிதாக ஒதுக்கி விடமுடியாது காரணம் இந்த உலகை ஒரு காலவரையரைக்குள் கொண்டு வந்ததுதான் அதாவது கிறிஸ்து பிறக்கும் முன்பாக இருந்த காலத்தை கி.மு எனவும் கிறிஸ்து பிறந்த பின் உள்ள காலத்தை கி.பி எனவும் ஒரு வரையறைக்குள் கட்டுபடுத்தியிருக்கிறது இங்கே ஒரு விஷயம் யோசிக்க வேண்டியிருக்கு அப்படியானால் இயேசு பிறப்பதற்கு முன் எப்படி காலத்தை எப்படி கணக்கிட்டார்கள் என்பது பற்றி சரியான தகவல் இல்லையென்று தான் நினைக்கிறேன்.
       அதிலும் இயேசுவின் பிறப்பிற்கு முன்பே பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தீர்க்கதரிசிகள் அறிவித்ததாக பைபிள் வழி அறியமுடிகிறது அது மட்டுமல்லாமல் வெரும் ஒரு கதையாக இல்லாமல் பல இடங்களில் வரலாற்று ஸ்தளங்களின் பெயர் இருப்பது நம்ப வைப்பதாய் இருக்கிறது. இயேசு பிறப்பார் எனவும் அவர் மக்களின் நோய் நொடிகள் தீர்ப்பார் எனவும் தீர்க்கதரிசிகள் சொன்னது போல நடந்தது என பைபிளில் பல இடங்களில் வாசகங்கள் காணப்படுகிறது மேலும் இவர் பிறந்த நாள் தான் இப்போது கிறிஸ்துமஸ் என கொண்டாடப்படுகிறது ஆனால் இதிலும் சில மாயாஜால விஷயங்கள் காணப்படுகிறது உதாரணத்திற்கு மரித்தவரை எழுப்பினார், கன்னிப்பெண் கருத்தரித்து தீர்ந்து போன உணவுகள் மலை மலையாய் குவிந்தது என இப்படியும் இதில் சில தகவல்கள் இருக்கின்றன ஆனால் இந்த மத்ததிலும் நன்மை செய்வதையும் நல்ல வழியில் நடப்பதையும் தான் அறிவுறுத்துகின்றனர். இங்கு மாமிசத்தை பொருத்தவரை தடையில்லை அதற்கு ஒரு விளக்கவும் காணப்படுகிறது நீ செய்யும் பாவங்களை நானே ஏற்றுக்கொள்கிறேன் என ஒரு வாசகம் இருக்கிறது பின்னர் எதனாலவோ பாவம் செய்தவனுக்கு நரகம் நன்மை செய்தவனுக்கு சொர்க்கம் என விளக்குவது நம்மை சிந்திக்க வைக்கிறது.
          இனி இஸ்லாம் மதம் இந்த மதத்தை பொருத்தவரை நிறைய தவறான கருத்துக்கள் இருக்கிறதென்பதை மறுப்பதிற்கில்லை, மேலும் அல்லாஹ் எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டார் அல்லது இதன் தொடக்க வரலாறு என்னவென்பதை உணர்ந்து கொள்ள கொஞ்சம் சிரமமாக இருக்கிறது காரணம் பார்த்தோமேயானால் அதிக இடங்களில் முகமது நபி என்கிற இறைதூதரை பற்றித்தான் பேசப்படுகிறது அதிலும் முகமது நபி அவர்களின் கருத்துகள் தான் முழுவதுமாய் விதைக்கபட்டிருக்கிறது சில இடத்தில் மூட நம்பிக்கைகளை அழிக்க சொல்லி சாடியிருக்கிறார் அதாவது குர் ஆனிலோ அல்லது ஹதீஸ்களிலோ இது மாதிரியான பழக்கங்களுக்கு ஆதாரம் இல்லை என அறியப்படுகிறது மேலும் இஸ்லாமில் சில நல்ல கருத்துகள் பொதிந்து கிடப்பதை மறுக்கமுடியாது அதாவது ஒரு இடத்தில் பூமியில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் உன்னிடம் அதிகம் இருக்குமேயானால் அதில் ஏழை எளியவர்களுக்கும் பங்கு இருக்கிறது அவற்றை சரியாக முறைப்படி கணக்கிட்டு கொடுக்கவேண்டும்
       மேலும் சில இடங்களில் மூட நம்பிக்கையை வளர்க்கும் விதமாக சில இடங்களில் காணப்படுகிறது அதாவது சமாதி வழிபாடு செய்வதன் மூலம் இறந்து போனவர்கள் நம்மை இறைவனை நெருங்கசெய்ய உதவுவார்கள் என நம்புகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை மேலும் சில இடங்களில் ஏழைகளுக்கு உதவுகிறவனும் பண்பாளனுக்கும் அல்லாஹ் ஆசீர்வதிப்பார் என்பதாக நல்ல விஷயங்களும் இருக்கிறது மேலும் கடவுள் என்பதை விட அடிப்படை நல்ல விஷயங்களை போதிப்பாதாகவே எனக்கு தோன்றுகிறது, சில இடங்களில் வட்டிக்கு கொடுப்பது தவறு எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது சில இடங்களில் வணக்கம் தெரிவித்தால் பதில் வணக்கம் சொல்ல அறிவுறுத்துகிறது ஒரு இடத்தில் ஒரு இடத்தில் என் சமுதாயத்தில் வருங்காலத்தில் என் பள்ளிகள் அதிகமாக இருக்கும் கூட்டம் நிரம்பி வழியும் அதே நேரத்தில் அங்கு நேர்மை இருக்கது என முகமது நபி அவர்கள் கூறுகிறார்கள் இந்த இஸ்லாம் மதம் தொடங்கும் போது வெறும் 40 நபர்களுடன் ஆரம்பித்ததாம் என்னை பொருத்தவரை மத அடிப்படையோடு சில வாழ்வியல் அடிப்படைகளையும் இனணத்தே காணப்படுகிறது.
         அடுத்து புத்த மதம் இதை பற்றி பார்ப்போமேயானால் நேரடியாக இந்து மதத்திலிருந்தே பிரிந்து போனதாக சொல்லப்படுகிறது ஆனால் இது முழுக்க முழுக்க ஒரு மனிதனை கடவுளாக சித்தரித்தது இதிலும் சில நல்ல விஷயங்கள் இருந்தாலும் இதில் மறைமுகமாக தவறான வழியில் அழைத்து சென்றதாகவும் ஒரு தகவல் அதாவது புத்தர் ஒரு ஆணாதிக்கவாதி எனவும் பெண்களை வெறுப்பவர் எனவும் அந்த வெறுப்பில் தான் துறவறம் பூண்டார் எனவும் சில இடங்களில் பெண்களுக்கான உரிமை விஷயத்தில் மறுப்பு தெரிவித்ததாகவும் கூட வரலாறு இருக்கிறது மேலும் தம்மை பின் தொடரகூட பெண்களுக்கு ஒழுக்க விதிகள் ஏற்படுத்தியாதாகவும் காணப்படுகிறது இருப்பினும் சில இடங்களில் சில நல்ல விஷயங்களையும் சொல்கிறது குறிப்பாக அடுத்தவனின் மனைவி மேல இச்சை கொல்லாதே உன் வயதுக்கும் குறைந்த பெண்களை சகோதரியாக பாவிக்கவும் உன் வயதுக்கு மேலை உள்ள பெண்களை தாயாக பாவிக்கவும் போதிக்கபடுகிறது ஒரு வேளை கிறிஸ்து, மற்றும் இஸ்லாம் இந்த இரு மதங்களும் துறவறம் என்பதை இங்கிருந்துதான் எடுத்துக் கொண்டிருக்குமோ என்ற சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

ஆக எல்லா மதங்களுமே பார்த்தோமேயானால் முடிந்தவரை கடவுள் எனும் பெயரில் நல்ல விஷயங்களை தான் சொல்லியிருக்கிறது சில விஷயங்கள் தவறாகவும் தினிக்கபட்டிருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அறிவோம். நாம் ஒவ்வொருவரும் நமக்கு பிடித்தமான மதத்தில் இருக்கிறோம் பிடித்தமான தெய்வங்களை வழிபடுகிறோம் நமக்கு பிடித்தமான உணவுகளை இறைவனுக்கு படைக்கிறோம் இது எல்லாமே ஒரு மூடச்செயல் போல தோன்றினாலும் இதன் பின்னே நல்ல விஷயங்கள் இருப்பதை நாம் உணரமுடியும் சாதரண ஒரு ஏழையால் அவனுக்கு பிடித்த உணவை எப்போதும் உண்ண முடியாது ஆனால் அவனுக்கும் நல்ல உணவு கிடைக்கவேண்டும் என்கிற நோக்கில் தான் தன்னை கொண்டாட சொல்லியிருக்கிறான் அவனுக்கு நல்ல உணவு கிடைக்குமே இப்படி மறைமுகமான சிந்தனைகள் நிறைய காணப்படும் நீங்களும் யோசித்து பாருங்களேன்.
         நம்முடைய ஒவ்வொரு மதத்திலும் நமக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதன் பேரில்தான் வழிபடுகிறோம் ஆனால் கடவுளை நம்பும் அளவிற்கு நாம் உண்மையாக நேர்மையாக நடக்கிறோமா என்றால் நிச்சியமாக இல்லை என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன் ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம். கடவுள் என்பவன் இருந்தால் நல்லவனாக தானே இருக்கமுடியும், நாம் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் தண்டனை கொடுத்தால் நாம் வாழ்க்கையில் கஷ்டங்களை மட்டும்தானே பார்த்துகொண்டிருபோம் ஆனால் கடவுள் என்பவன் நாம் செய்யும் பாவங்களை மன்னிப்பதால் தானே நாம் இன்னமும் பூமியில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவித்துகொண்டிருக்கிறோம் ஒருவேளே கடவுள் ஒரு சர்வாதிகாரியைப்போல இருந்தால் நமக்கு சொர்க்கம் என்ற வார்த்தையே தெரியாமல் போயிருக்கும்தானே.

கருத்துகள் இல்லை: