தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/18/2012

கதை சொல்வதில் இந்தியர் பேர் போனவர்கள் - 2


2. தீட்சை
ஜூனுன் என்று ஒரு மகானிருந்தார். அநேகம் பேர் அவரை நாடி வருவது வழக்கம். யூசப் என்ற இளைஞன் ஆவலுடன் அவரிடம் வந்தான். அவனை எதுவும் விசாரிக்காமல் அவனை அங்கேயே இருக்கச் சொன்னார். நான்கு வருஷம் கழிந்தது. ஒரு நாள் அவனைக் கூப்பிட்டு மகான் விசாரித்தார். "எதற்காக வந்தாய்?'' என்று கேட்டார். "தீட்சை பெற வேண்டி தங்களிடம் வந்தேன்'' என்றான்.
அங்கிருந்த ஒருவரை அழைத்து ஒரு பெட்டியை எடுத்து வரச் சொன்னார். அதை யூசப்பிடம் கொடுத்து வெகுதூரத்தில் ஒரு விலாசம் கொடுத்து, "அங்குள்ள ஒருவரைச் சந்தித்து இப்பெட்டியை அவரிடம் சேர்த்து விடு. திரும்பி வந்தவுடன் தீட்சை அக்கிறேன்'' என்றார்.
அந்த ஊரை நோக்கி யூசப் நடந்தான். வெயிலில் களைத்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். நடக்கும்பொழுது அவன் மனம் நடை மீதிருந்தது. பெட்டியைப் பற்றி நினைவில்லை. அது பூட்டப்பட வில்லை என்பதையும் அவன் கவனிக்கவில்லை. உட்கார்ந்தவுடன் மனம் வேலை செய்ய ஆரம்பித்தது. ஏன் இந்தப் பெட்டியை என்னிடம் கொடுத்தார். எளிதில் திறக்கலாம் போலிருக்கின்றதே? இதனுள் என்ன இருக்கும்? பார்க்கலாமா? பார்த்தால் என்ன தவறு? என்று மனம் நினைத்தபொழுது, "அது தவறு. குரு இட்ட ஆணை. அவர் பேச்சை மீறக் கூடாது. எது இருந்தால் எனக்கென்ன?'' என்று மனத்தைச் சமாதானம் செய்தான். சிறிது நேரம் கழித்து மனம் மீண்டும் அதே கேள்விகளைக் கேட்டது. மீண்டும் அமைதியடைந்தான். பல போராட்டங்களுக்குப் பின், அவன் தோற்று விட்டான். அவன் மனம் வெற்றியடைந்தது.
பெட்டியைத் திறந்தான். திடீரென ஒரு சுண்டெலி குதித்தோடியது. யூசப் வருத்தப்பட்டான். மீண்டும் பிரயாணத்தைத் தொடர்ந்து, அந்த விலாசத்தைத் தேடிப் போனான். அவரும் ஒரு மகான். அவரிடம் பெட்டியைக் கொடுத்தான். திறந்து பார்த்தார். அவன் முகத்தையும்
ஏறிட்டுப் பார்த்தார். நடந்தது முழுவதும் அவருக்குத் தெரிந்தது. அவனுக்கு உபதேசம் செய்தார். "உன் குரு உன்னை நம்பவில்லை. மனோதிடத்தைச் சோதிக்க இதைச் செய்திருக்கின்றார். நீ தோற்றுவிட்டாய். இது தவறு'' என்றார்.
வருத்தத்துடன் குருவை நாடி வந்து செய்த தவற்றையும், நடந்தவை அனைத்தையும் யூசப் சொன்னான். "உன்னால் ஒரு சுண்டெலியைக் காப்பாற்ற முடியவில்லை. பெரிய ஞானத்தை உன்னை நம்பி எப்படிக் கொடுக்க முடியும்?'' என்றார். யூசப் தன்னிருப்பிடம் சென்றான். மனோதிடத்தை வளர்க்கப் பாடுபட்டு வெற்றி கண்டான். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் குருவிடம் வந்து தீட்சை பெற்றுப் பெரிய மகானாக வாழ்ந்தான்.

கருத்துகள் இல்லை: