தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/26/2012

63 -வது குடியரசு தின வாழ்த்துகள் .....




          நாம் இந்த நாட்டில் பிறக்க வேண்டும் என்று நினைப்பதில்லை, அது விதிக்கப்பட்டது என்று நினைத்து கொண்டாலும் சரி, தற்செயலானது என்று நினைத்து கொண்டாலும் சரி, உண்மை என்னவென்றால் நாம் பிறக்கும் போதே அந்த நாட்டின் கலாச்சாரமும், பண்பாடும் நம்மோடு சேர்ந்து ஊட்டப்படுகிறது, முன்னோர்களின் தியாகம் நம்மிடயே நாட்டு பற்றை வளர்க்கிறது!, வரலாறு மறக்கப்படும் போது நாட்டின் மேல் உள்ள பற்றும், ஆர்வமும் குறைந்து மூன்றாம் நிலம் போன்ற எண்ணம் ஏற்படுகிறது!


இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வியாபார விசயமாக ஜப்பான் செல்ல வேண்டியிருந்தது, ஒரு ரயிலில் அவர் பயணம் செய்து கொண்டிருந்த போது, எதிரில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர் தீடிரென்று எழுந்து இருக்கையில் கிழிந்திருந்த கிழிசலை தைக்க ஆரம்பித்தார், இந்தியரோ அவர் இங்கே தான் வேலை செய்கிறார் போலன்னு நினைச்சிட்டார், தைத்து முடிந்த அவர் மீண்டும் இருக்கையில் அமர்ந்து கோப்புகளை எடுத்து பார்க்க ஆரம்பித்தார், இந்தியருக்கோ ஆச்சர்யம், தைத்து கொண்டிருந்தவர் கோப்புகள் பார்த்து கொண்டிருக்கிறாரே என்று!


ஐயா யார் நீங்க? என்று கேட்டார்!, ஏழெட்டு முகவரி அட்டைகள் நிரம்பிய உறை ஒன்றை தருகிறார், அத்தனைக்கும் அவர் தான் நிறுவனரும் கூட, இந்தியருக்கோ ஆச்சர்யம், பின் ஏன் ஐயா நீங்கள் இதை தைத்தீர்கள் என கேட்கிறார், ஜப்பான்காரர் சொல்கிறார், ஐயா இது என் நாடு, இங்குள்ள பொருள்கள் எமது பொருள்கள் மாதிரி தான், அதை பத்திரமாகவும் நன்றாகவும் பார்த்து கொள்ள வேண்டியது ஒவ்வோரு ஜப்பானியனின் க்டமை என்றார், அது உண்மையோ, புனைக்கதையோ அது நமக்கு தேவையில்லை, ஆனால் அம்மாதிரி கதைகள் தான் இரண்டாம் உலகப்போரில் சாம்பலாய் போன ஜப்பானை மீண்டும் உயிர்பெறச் செய்தது!

சமூக அக்கறையில் யாருக்கும் நரம்புகள் புடைக்க வேண்டும், கழுத்தில் நரம்பு தெரிந்து ரத்தம் பீரிட வேண்டும், நம்மையும், நம் சுற்றுசூழலையும் அக்கறையுடன் கவனித்து கொண்டாலே போதும், மனிதர்களுக்கு உரிய அடிப்படை கடமைகளையும், கட்டுப்பாடுகளையும் மதிக்க தவறினால் நாம் மனித உருவில் திரியும் காந்திஜி  ,நேதாஜி , போல தான்!

               அனைவருக்கும் எனது குடியரசு தின வாழ்த்துகள் ...

                   வாழ்க பாரதம்!    வாழ்க பாரதம்!! வாழ்க பாரதம்!!! 

மறுபதிவு 

கருத்துகள் இல்லை: