தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/20/2012

கதை சொல்வதில் இந்தியர் பேர் போனவர்கள் - 3

3.  தியானத்தில் வந்த புலி
புத்த குருவை நாடி முதன் முதலாக ஐரோப்பாவிலிருந்து வந்த பெண்மணி, தியானம் பயின்றார். தியானத்தை முறைப்படிப் பயின்றதுடன் ஒருநாள் தவறாமல், மணி தவறாமல் தியானத்தைக் கடைப் பிடித்தார்.
குருவின் ஆசிரமத்திலிருந்து காட்டினுள் சென்று (camp or picnic) சில நாள்கள் கழிக்கப் பலர் சேர்ந்து புறப்பட்டனர். இப் பெண்மணியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். அவர்கள் போகும் இடம் புலி யுள்ள இடமானதால், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
ஒருநாள் இப் பெண்மணியின் தியான நேரம் வந்தது. மற்றவர் காட்டினுள் செல்லப் புறப்படும் பொழுது, இப் பெண் தியானத்தை மேற்கொள்ள விரும்பினார். புலி வரும், தனியாக இருக்கக் கூடாது என்ற எச்சரிக்கையைப் புறக்கணித்தார்.
ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்தார். புலி வந்தது. தியானம் கலைந்தது. புலி எதிரில் நின்றது. "இதுவே என் முடிவானால் ஆகட்டும். நான் தியானத்தை நடுவில் நிறுத்தப் போவதில்லை'' என மீண்டும் கண்ணை மூடினார். ஆழ்ந்த தியானம் மீண்டும் அமைந்தது. புலி நினைவில்லை. தானாக தியானம் கலைந்தது. புலியைக் காணவில்லை. மனம் அமைதியிலி ருந்து மீளச் சற்று நேரமாயிற்று. புலி நினைவில் வர நெடு நேரமாயிற்று.

கருத்துகள் இல்லை: