தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/08/2011

அற்புதமாய் செதுக்குகிறேன் உன்னால்....

போராட்டங்கள் சங்கிலி தொடராய் தொடர
தனிமையில் வெறுமையை தேடி மனம் அலைய
சிந்தனை செய்தே செத்து கிடக்கிறது அறிவும் !

அகலக்கால் வைக்காதே விரைவில் அடிவிழும்
பெரியோர் அறிவுரை சரிதானோ
என்றே பிதற்றுகிறது மனம் !

கண்ணீரால் கவலைகளை கழுவிவிட
முயன்றும் கவலை தொலையவில்லை
கண்ணீரும் நிற்கவில்லை !

தட்டினேன் திறக்கவில்லை
கேட்டேன் கிடைக்கவில்லை
தேடினேன் கண்டடையவில்லை !

வெளிவர வகையற்று ஓட்டுக்குள்
நத்தையாய் ஒளிந்து கிடக்கிறேன் !
எதற்கும் கலங்காத என்னை கதற
வைக்கிறது வாழ்க்கை !

பற்றி கொள்ள உன்னிடம் கரம் நீட்டினேன்
கரம் விடுத்து உயிர் பற்றினாய் உறுதியாய் !
ஒரே ஆறுதலாய், உயிராய் நீ இருக்கையில்
இனி உதிரம் வற்றியும் துக்கம் இல்லை !

என் காயங்களை உன் கண் அசைவில்
கவசமாய் மாற்றி விட்டாய் ஒரு நொடியில் !
நெருப்பை ஒரு போதும் கரையான்கள் அரிக்காது
என்று சொல்லியே குளிர வைக்கிறாய் என்னை !

'எனதுயிரே ! துயரங்களை தூரப்போடு
நாளையும் இருக்கிறது ஒரு போராட்டம்
சந்திக்க வேண்டும் உற்சாகமாய்'
என்றே திடப் படுத்துகிறாய் தினமும் !

'இன்னும் கொஞ்சம் அமைதி கொள்
என் தோள் இருக்கிறது' என்றே
சாய்த்து கொள்கிறாய் என்னை !

சோகம் இடியாக நெஞ்சில்
இறங்கும் போதெல்லாம்
என் மனம் தளராமல் தாங்குகிறாய் !

அவமான கல்லில் அழகு சிலை
அற்புதமாய் செதுக்குகிறேன்
உன்னால் இன்று !!

இந்த வாரம் ஆனந்த விகடனுக்கு அனுப்பியது....

கருத்துகள் இல்லை: