தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/24/2011

பேரு‌ந்து ‌தின‌ம் ‘அட்டகாசம்
சென்னையில் கட‌ந்த ஒரு வாரமாக க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ளா‌ல் பேரு‌ந்து ‌தின‌ம் கொ‌ண்டா‌டப்ப‌ட்டு வரு‌கிறது. க‌ல்லூ‌ரி‌யி‌ல் இறு‌தி ஆ‌ண்டு படி‌க்கு‌ம் மாணவ‌ர்களா‌ல் இ‌ந்த பேரு‌ந்து ‌தின‌ம் கொ‌ண்டாட‌ப்படு‌கிறது. இ‌ந்த பேரு‌ந்து ‌தின‌த்‌தா‌ல் அ‌திக‌ம் பா‌தி‌க்க‌ப்படுவது க‌ல்லூ‌ரி ‌நி‌ர்வாக‌ம் அ‌ல்ல, பொது ம‌க்களு‌‌ம், காவ‌ல்துறையு‌ம் தா‌ன். ‌அ‌ந்த அளவு‌க்கு மாணவ‌ர்க‌‌ளி‌ன் பேரு‌ந்து ‌தின‌ம் ‘அட்டகாசமாக’ நட‌க்‌கிறது.
செ‌ன்னை ந‌ந்த‌னம் அரசு கலை‌க்க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள் அ‌ண்மை‌யி‌ல் பேரு‌ந்து ‌தின‌த்தை கொ‌ண்டாடின‌ர். சே‌த்து‌ப்ப‌ட்டு அருகே மாணவ‌ர்க‌ளி‌ன் பே‌ரு‌ந்து வ‌ந்தபோது பேரு‌ந்து‌க்காக கா‌‌த்‌‌திரு‌ந்த பெ‌ண்களை கே‌லியு‌ம், ‌கி‌ண்ட‌லு‌ம் செ‌ய்து‌ள்ளன‌ர் மாணவ‌ர்க‌ள். இதனா‌ல் பொதும‌க்களு‌க்கும‌், மாணவ‌ர்களு‌க்கு‌ம் இடையே மோத‌ல் ஏ‌ற்ப‌ட்டது. ‌பி‌ன்ன‌ர் மாணவ‌ர்க‌ள் சாலைக‌ளி‌ல் இரு‌ந்து ம‌றிய‌லி‌லு‌ம் ஈடுப‌ட்டன‌ர். போ‌க்குவர‌த்து பா‌தி‌க்க‌ப்ப‌ட்டது‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் ‌விரை‌ந்து வ‌ந்து மாணவ‌ர்க‌ளிட‌ம் பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்‌தி கலை‌ந்து போக‌ச் செ‌ய்ததோடு க‌ல்லூ‌ரி வரை பாதுகா‌‌ப்போடு அழை‌‌த்து செ‌ன்றன‌ர்.
இ‌ந்த ‌பிர‌ச்சனை அட‌ங்குவத‌ற்கு‌ள் நே‌ற்று ப‌ச்சைய‌ப்ப‌ன் க‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ளா‌ல் பெரு‌ம் வ‌ன்முறை வெடி‌த்து‌வி‌ட்டது. 15 பி மாநகர பேரு‌ந்‌தி‌ல் பே‌ரு‌ந்து தின விழா கொண்டாடப்போவதாக அறிவித்திருந்தன‌ர் ப‌ச்சைய‌ப்ப‌ன் க‌‌ல்லூ‌ரி மாணவ‌ர்க‌ள். அவ‌ர்களு‌க்கு பேரு‌ந்துகளை வழங்க மாநகர போக்குவரத்துக்கழகம் மறுத்ததா‌ல் காவ‌ல்துறை‌யின‌ரிட‌ம் பே‌சி ஏற்பாடு செய்து அமைதியாக செல்வோம் என்று மாணவர்கள் உறுதி அ‌ளி‌த்ததா‌ல் 3 பேரு‌ந்து‌க‌ள் வழங்கப்பட்டது.கருத்துகள் இல்லை: