தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/10/2011

இப்படிதான் கவிதை ....


உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளை
கொஞ்சம் கற்பனை கலந்து
நல்ல பல சொற்களையும் சேர்த்து…


என் மனதுக்குள் நிறைந்த
திறந்த அந்த விஷயம்
அதைப் படிப்பவர்களின் மனதிலும்
ஏதோ ஓர் தாக்கத்தை ஏற்படுத்தி
கண்முன் காட்சியாய் தோன்றி நிற்க…


அவர்கள் மனதுக்குள்ளும்
உறைந்திருந்த, ஒளிந்திருந்த
சில விஷயங்களைத் துருவி
திடீரென்று எதையெதையோ ஞாபகப்படுத்த…


மொழியின் தன்மையோடு
அதிகம் நீளாமல், சுருக்கமாக
இணைத்த சொற்களின் கோர்வையே கவிதை .

கருத்துகள் இல்லை: