தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/01/2011

கையூட்டு....

           
       எதிர்காலத்தில் ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் கடமை, இன்றைய மாணவர்களுக்குத்தான் உண்டு. முடியாது என்ற எண்ணத்தை தவிர்த்து, முடியும் என்ற முடிவோடு செயல்பட்டால், ஊழலை முற்றிலும் ஒழிக்க முடியும். அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே, பொருளாதார நெருக் கடி காலத்தில் சிக்கித்தவித்தன. ஆனால் இந்தியா மட்டும் பொருளாதார நெருக்கடிக்கு அதிகம் பாதிக்கவில்லை. பொருளாதார நெருக்கடி விஷயத்தில், உலக நாடுகளை நம் பக்கம் திரும்பி பார்க்க வைத்த நம்மால், லஞ்சம், ஊழலை முற்றிலும் ஒழிக்க முடியும். இளைஞர்களும், மாணவர்களும் லஞ்சம், ஊழலை எதிர்த்து செயல்பட்டால், வறுமையற்ற நாடாக இந்தியா உருவாகும், ஊழல் எதிர்ப்பு இயக்க நண்பர் ஒருவர் என்னுடன்  பேசுகையில், ""லஞ்சம், ஊழலை ஒழிக்க கிராமம் கிராமமாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள், இளைஞர்களை கொண்டு குழுக்கள் ஏற்படுத்தி, அரசு அலுவலகங்கள் மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்,'' .நாம் செய்கின்ற சிறிய வேலைகளுக்கு நாம் காத்திருக்க மறுத்து அதை உடனே செய்ய நினைக்கும் நேரங்களில் நமது எண்ணம் கையூட்டு தர வைக்கிறது...
     அதை   தருவதற்கு நாம் தயாராக இருக்கும் போது , அதை வாங்கிய வி.. ,காவல் அதிகாரி, மந்திரி, அரசியல்வாதிகள்,முக்கிய பிரமுகர்(ராஜா,மோடி,கல்மாடி,சவான்) என இவர்கள் பிடிப்படும்போது நாம் அவ்ர்களை வசைப்பாடி மகிழ்கிறோமே அது எந்த விதத்தில் நியாயம் என யோசித்து பார்க்க வேண்டும். .......

மீண்டும் சந்திப்போம் ....

கருத்துகள் இல்லை: