தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

2/12/2011

ஏன் இந்தியா உலக கோப்பை வெல்ல வேண்டும் ...


            சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. பலமான முழு இந்திய் அணி இதில் களமிறங்குகிறது. இதனால் எதிர்பார்ப்புகள் அழுத்தம் அதிகரித்து வருகிறது. சச்சின் டெண்டுல்கரின் கடைசி உலகக் கோப்பை என்று கருதப்படும் இந்த உலகக்கோப்பையில் அனைவரின் கவனம் முழுதும் இந்திய அணி மேல் இருப்பதால் அழுத்தத்தை எவ்வாறு கடக்கிறார்கள் என்பதைப்பொறுத்து வெற்றி தோல்வி நிர்ணயம் செய்யப்படலாம்.

இந்தியா ஏன் இந்த உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதற்கான என் பார்வையில் காரணங்கள்:


1. 2007ஆம் ஆண்டு ஏற்பட்ட அவமானகரமான முதல் சுற்று வெளியேற்றத்திற்குப் பதிலடி கொடுக்கவேண்டும்.


2. சச்சின் டெண்டுல்கர் தனது கடைசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேகிறார். 22 வருட நீண்ட கிரிக்கெட் வாழ்வில் ஒரு உலகக் கோப்பை சாம்பியன் பட்டம் கூட இந்தியா வெல்லவில்லை என்பது சச்சினுக்கு பெரிய வருத்தமாக போய் விடும் என்பதை விட அவரது ரசிகர்களுக்கும் இந்திய கிரிக்கெட்டிற்குமே பெரிய ஏமாற்றமாகப் போய் முடியும்.


3. உள்நாட்டு மைதானங்களில் விளையாடுவது.


4. தோனி தலைமையில் ஒரு முழு பலம் பெற்ற இந்திய அணி இப்போதுதான் களமிறங்குகிறது. இதற்கு முந்தைய சில தொடர்களில் முன்னணி வீரர்கள் சிலர் இருக்க மாட்டார்கள். குறிப்பாக சச்சின் டெண்டுல்கர், சேவாக் இல்லாமல் விளையாடியுள்ளார். எனவே இந்த அணியை வைத்துக் கொண்டு தோற்க முடியாது.


5 எல்லாவற்றிற்கும் மேலாக பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன் இந்த அணி மீது தன்னலமற்ற ஒரு பிரியம் காட்டி இதன் வெற்றி தோல்விகளில் பங்கு பெற்று அணியை வளர்த்தெடுப்பதில் பெரும் தாக்கம் செலுத்தியுள்ளார். அவர் இந்தியா சாம்பியன் என்ற உணர்வுடன் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விடுபட பெரிதும் விரும்புவார்.


6. இந்தியாவில் இந்திய ரசிகர்கள் முன்னிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறுவது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும்.

7 .இளம் இந்திய வீரர்கள் கொண்ட பலமான அணி

8 . தற்போது டெஸ்ட் முதலிடம் ,ஒரு நாள் போட்டியில் இரண்டாம் என பலமான அணி

கருத்துகள் இல்லை: