தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/11/2010

நான் நினைப்ப தெல்லாம்
கவிதை ஆவதில்லை !
நான் வடித்த கவிதை
நம்பும்படி இல்லை!
நான் நினைத்த மாதிரி
அமைவ தில்லை!


சமுகத்தின் சல்லிவேர்களை
சாடாமல் போனாலும்
ஆணிவேர்களை ஆட்டாமல்
விட்ட தில்லை!


என் கவிதை ஆசிட்
பட்டு பட்டு
பட்டுப் போன மரங்கள்
பல பல !


சமுக அவலங்களை சாடி
கத்தி இன்றி
இரத்தமின்றி சுத்தமாய்
அறுவை சிகிச்சை செய்வன
என் கவிதைகள்!


சாகியம் பேசும் சமுகத்தில்
சதி செய்யும் உலகில்
கால் ஊன்றி
சாதி சாதி சாதியென
சாதனை படைக்கும்
சாகா வரம் பெற்றவை
என் கவிதைகள்!


சிந்தினை தூண்டி விட்டு
சின்ன இதயத்தில்
மனிதநேயம் வளர்க்கும்
மகா கவிதைகள்
இறைமை தன்மை பெற்று
இன்றும் இயங்கிகொண்டிருப்பவை!

எழுதிய நாள் : 16.07.2008

கருத்துகள் இல்லை: