தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

1/21/2010

இதுதான் ரஜினி...

இதுதான் ரஜினி...

எந்திரனின் இறுதிக்கட்ட நடவடிக்கைகளில் ரஜினி மும்மரமாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் புதிய படங்களை பார்ப்பதை மறக்கவில்லை . இந்தவகையில் கடந்த வாரம் ரஜினி பார்த்த படங்கள் 'ஆயிரத்தில் ஒருவன் ' மற்றும் 'குட்டி ' என்பனவாகும். இதில் ஆயிரத்தில் ஒருவனை தயாரிப்பாளர் ரவீந்திரனின் அழைப்பின் பேரிலே பார்த்த ரஜினி கார்த்தியையும், செல்வாவையும் வழமைபோல வியந்து பாராட்டியுள்ளார். நல்லவேளை இந்தத்தடவை ரஜினி படத்தை பாராட்டி கடிதம் வழங்கவில்லை , இல்லாவிட்டால் ரஜினியால்தான் படம் ஓடுவதாக ஒரு தரப்பு கூற, இதுதான் சாட்டென்று ரஜினிக்கு எதிரான குரூப்பு ரஜினியை இஸ்ரத்துக்கு விமர்சித்திருக்கும். தலைவா கிரேட் எஸ்கேப்.....

அடுத்து ரஜினி 'குட்டி ' படத்தை பார்த்தது அவர் சன் மியூசிக்கிற்கு போன் பண்ணியதாலேயே தெரியவந்தது, தனுஸ் பங்குபற்றிய ஒரு நேரடி நிகழ்ச்சியை தொகுப்பாளர் அடம்ஸ் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். வழமை போல தனுஸ் தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார். திடீரென் ஒரு அழைப்பு வந்தது, அழைத்தவர் " நான் ரஜினி பேசிறன் 'குட்டி' படம் பார்த்தேன் , நல்லாயிருக்கு , வணிகரீதியாக படம் வெற்றியடையும், தனுஸ் நன்றாக நடித்திருக்கிறார், பாராட்டுக்கள்" என்றார். தொகுப்பாளருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை அவரது படபடப்பு அதிகரித்தது, அந்தநேரம் பார்த்து ரஜினி " அடம்ஸ் உங்க புரோகிராம் எல்லாம் பார்ப்பேன் , நல்லா பண்றீங்க வாழ்த்துக்கள் " என்றார். அடம்ஸ் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடினார்.

தனக்கு ஆஸ்கார் கிடைத்ததைவிட மகிழ்ச்சி என்கிறார், தான் ரஜினியின் தீவிர ரசிகர் என்கிறார், ரஜினியின் குரல் சிம்மக்குரல் என்கிறார் , இன்னும் என்னென்னவோ எல்லாம் சொல்கிறார். இப்படியே உளறிக்கொண்டிருந்த அடம்ஸ்சிற்கு தொடர்பிலிருந்து ரஜினி சென்ற பின்னர் ஒரு பாடல் ஒளிபரப்பிய பின்னரும் உளறல் அடங்கவில்லை. இதெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தனுஸ் கூறினார் "இதே போலத்தான் எனக்கும் 'காதல் கொண்டேன்' படத்தை பார்த்துவிட்டு ரஜினி என்னை அழைத்து அரை மணிநேரம் பேசும்போதும் இருந்தது, அப்போது நான் யாரென்றே அவருக்கு தெரியாது, அதே போல அந்த அரைமணி நேரம் அவர் என்ன பேசினார் என்பதும் எனக்கு தெரியாது, நீங்கள் இப்போது உள்ளது போலத்தான் நான் அப்போது இருந்தேன் " என்றுகூறி சிரித்தார். இதுதான் ரஜினி

கருத்துகள் இல்லை: