தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

9/02/2010

5தொகை

*அழகனோ அழகியோ இல்லை
  காதல் மட்டும்அழகியல் கூறுகளோடு..
* காதலிப்பவரை கைபேசியுடன்
அலைபவரை வெறுக்கிறோம்
நாம் காதலிக்கும்வரை ....


* நெஞ்சம் நிறைகிறது பால் மணத்தால்
விடுதியில் இருக்கும் என் மகன்
உணவு பிடிக்காமல் பசித்த வயிற்றோடு ...
* விஷேச  தினங்களில்
அநேக பலகாரங்கள் ஒருபோதும்
உண்ணக்கேட்காத சாமிக்காய்...


* தொட்டாற்சிணுங்கியின்
செல்லச் சிணுங்களில்
உயரப் பறக்கும் தட்டான்கள் ....
* வார்த்தைக் கல்லில் அடிபட்ட
மௌனச்சிறகாய் மனசு.....


* எல்லாவற்றையும் கடைந்து., கடந்து
எது விஷம் .,? எது அமிர்தம்.,?
யார் தேவர்.,? யார் அரக்கர் .,?
* அது அதுவாய் வரும்வரை
அததனோடு போராட்டம்....


* சொல்லப்படாத பாசம்
பிரமிடுக்குள் மம்மியாய்
தலைமுறைகடந்தும்.....
* வாசிப்புக்குப்பின் ஓட்டு மட்டும் போடுவதோ.,
பின்னூட்டம் மட்டும் இடுவதோ .,
பாதி சாக்லேட் மட்டும் தருவதாய்....

கருத்துகள் இல்லை: