தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

9/11/2010

கதை எழுத நினைப்பவர நீங்கள் ? இது உங்களுக்கான பதிவு .....

கதை எழுத வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் கதாசிரியர்களுக்கும்
ஒரு வரப்பிரசாதமாக இனி ஆன்லைன் -ல் கதை எழுதலாம். பல்வேறு
விதமான படங்களையும் சேர்த்து அழகிய புத்தகம் உருவாக்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

கதை எழுதவேண்டும் என்ற ஆசை நெடுங்காலமாக இருக்கிறது ஆனால்
அதற்கு நேரம் இல்லை கூடவே கதைக்கு தகுந்த மாதிரி நாம் நினைத்த
படங்கள் கிடைக்கவில்லை என்று நினைக்கும் அனைவருக்கும் எளிதாக
ஆன்லைன் மூலம் கதை எழுதலாம். எழுதிய கதையில் விரும்பிய
படங்களை சேர்த்துக்கொள்ளலாம். எழுதிய கதையை ஆன்லைன் மூலம்
நண்பர்கள் அனைவருக்கும் அனுப்பலாம். நமக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://storybird.com

இந்தத் தளத்திற்கு சென்று நாம் ஒரு இலவச புதிய கணக்கை உருவாக்கி
கொண்டு கதை எழுத தொடங்க வேண்டியது தான்,.விரும்பிய படங்களை
நாம் விரும்பும் பக்கத்தில் சேர்த்துக்கொள்ளலாம். நேரம் கிடைக்கும்
போது நம் கணக்கை திறந்து கொண்டு ஒவ்வொரு பக்கமாக கதையை
எழுதி கொண்டே போகலாம்.இங்கு இருக்கும் படங்களை பார்க்கும்
போது எல்லோருக்கும் கதை எழுதவேண்டும் என்ற ஆசை வரும்.
நேரம் கிடைக்கும் போது பயன்படுத்திப்பாருங்கள். இலட்சதிற்கும்
மேற்பட்ட கதைகள் இந்தத் தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன.சென்னையில்
இருந்து தோழி வாசகி அவர்கள் தான் ஆன்லைன் மூலம் கதை எழுத
இணையதளம் இருந்தால் கூறுங்கள் என்று கேட்டிருந்தார்
அவர்களுக்காகவும் நம் அனைவருக்காகவும் கதை எழுத ஒரு அழகான
பயனுள்ள தளம்.

கருத்துகள் இல்லை: