தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

9/09/2010

கண்ணாலனே .......

சென்ற வாரம் எனதுடன் இருக்கும் நண்பர்களில் ஒருவருக்கு வந்தவுடன் தொடர்ச்சியாக அனைவருகும் வந்துவிட்டது . என்னைத்தவிர அப்போது நான் அங்கு இல்லை .....அதை பற்றிய பதிவு தான் இது ....


மெட்ராஸ் ஐ என எப்படி பெயர் வந்தது? இந்த நோய்கான காரணம் முதன்முதலாக சென்னையில் கண்டுப்பிடிக்கப்பட்டதால் இந்த கண் நோய்க்கு இப்பெயர் வந்தது.

மெட்ராஸ் ஐ’ அவ்வப்போது வந்துப்போகும் எப்படி வரும்? ஏன் வரும் சொல்ல முடியாது ஆனா வர வேண்டிய நேரத்தில் வரும் . ’கஞ்சங்டிவிடிஸ்’ எனப்படும் ஒருவித கண் நோய்தான் ’மெட்ராஸ் ஐ   ஒரு வீட்டில் ஒருவருக்கு வந்தால் மற்றவர்களுக்கு அடுத்த சில நாட்களிலே அடுத்தவருக்கு பரவி விடுகிறது.


இந்த நோய் பாதித்தவர்களுக்கு கண்கள் சிவந்து தடித்து விடும். ஆனால் தற்போது கண் நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு கண்கள் சிவப்பது குறைவாக இருந்தாலும் எரிச்சல் அதிகம் இருக்கும். விஜயகாந்திற்கு எப்போதும் கண் சிவப்பா இருகிறதே அப்போ அவருக்கு கண் வலியா என்று கேட்காதீங்க அது எனக்கு தெரியாது

"மெட்ராஸ்- ஐ' ஒருவருக்கு தானாக வர சாத்தியமில்லை. யாராவது ஒரு நபருக்கு இந்நோய் பாதிப்பு இருப்பின் அவர்கள் மூலமாகவே பரவுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் கண்களை நேருக்கு நேராக பார்ப்பதாலோ அல்லது கிருமிகள் காற்றில் பரவுவதாலோ இந்நோய் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

இந்நோய் பாதித்தவர்கள் பயன்படுத்திய கைக்குட்டை, முகம் துடைக்கும் துணிகளை பயன்படுத்தினால் மட்டுமே கிருமிகள் எளிதில் பரவும். கண்நோய் பாதித்தோர் பயன்படுத்திய துணிகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. வீட்டில் இருப்போர், நோய் பாதிக்கப்பட்டவருக்கு கண்ணில் மருந்து ஊற்றியவுடன் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.

இந்நோய் பாதித்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு பாதிப்பு இருக்கும். சாதாரண வைரஸ் காய்ச்சல், சளி போன்றது தான் 'மெட்ராஸ் - ஐ'; தானாகவே சரியாகி விடும். மருத்துவரிடம் சென்றால் மூன்று நாளில் சரியாகிவிடும் மருத்துவரிடம் செல்லவில்லை என்றாலும் மூன்று நாளில் சரி ஆகிவிடும்,

மெட்ராஸ் ஐ பரவக்கூடியது என்பதால் இந்நோய் வந்தவர்கள் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க கறுப்பு கண்ணாடி அணிவது நல்லது. அடிக்கடி கை மற்றும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இருங்க நான் போய் முகம் கழுவிட்டு வரேன்...

கருத்துகள் இல்லை: