இன்று எனது நண்பரின் நண்பர் அவரது நண்பர் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்ய இரத்தம் தேவைப்பட்டது. ஆனால் அந்த மருத்துவர் (முதல் நாள் தானே ஏற்பாடு செய்வதாக கூறினார் பிறகு மாலையில் வந்து நீங்கள் தான் ஏற்பாடு பண்ண வேண்டும் அதுக்கு அப்புறம் தான் சிகிச்சை என்று கூறிவிட்டார்), ஏற்கனவே எடுக்கப்பட்ட இரத்தம் செலுத்த முடியாது (ஏதோ மருத்துவ காரணம் சொன்னார்கள்) எனவும் இங்கு வந்து தான் இரத்ததானம் தரவேண்டும் எனவும் கடைசி நேரத்தில் கூறிவிட்டனர். அதுவும் அவரின் இரத்தம் ரொம்ப அரிதான A1B+ve வகையை சேர்ந்தது, அதனால் அவர்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. உடனே அவர் அனைவர்க்கும் போன் செய்து அவசரமாக விஷத்தை சொன்னார் ,அது என் நண்பரின் உதவியுடன் எனக்கு வந்தது , நானும் என் நண்பரின் உதவியுடன் அவர்களுகு இரத்தம் தந்துள்ளேன், அதை இன்று நினைத்தாலும் உள்ளூர ஒரு சந்தோஷம். அவர்கள் நமக்கு பல்வேறு தானம் தந்தவனைபோல் என்னை பார்த்தனர் , ஒருவர் மாறி ஒருவராக தொடர்பு கொண்டு இறுதியாக திரு.ராமசாமி என்ற அன்பர் உடனே நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து கிளம்பி வந்து விட்டார். அவர் சுகாதார ஒரு முன்னணி பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறார், அங்குஇருந்து நாங்கள் வந்தவுடன் , மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த நாள் முதல் ,அடுத்த இரு தினங்களுக்கு பிறகு தொடர்ந்து என்னுடன் மிகவும் நீண்ட நாட்களாக பழகியதுபோல் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்
இது போல் உங்களுக்கும் அவசரமாக இரத்தம் தேவைப் பட்டால் மனித நேய அடிப்படயில் உங்கள் நண்பர்களின் உதவியுடன் தானம் செய்ய முயற்சி செய்யுங்கள்........
நீங்களும் இரத்த தானம் செய்ய முயலுங்கள்.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக