இன்று அயோத்தி தீர்ப்பு
1528: அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டது. ராமர் பிறந்த அந்த இடத்தில், கட்டுவதற்கு இந்துக்கள் எதிர்ப்பு.
1853: அயோத்தியில் ¬முதன் ¬முதலில் வன்முறை வெடித்தது. 75 பேர் பலி.
1859: பிரிட்டிஷ் ஆட்சியின் போது, இரு மதத்தினரும் வழிபட ஏற்பாடு. உட்பகுதியில்¬ முஸ்லிம்கள் வழிபடவும், வெளிப்பகுதியில் இந்துக்கள் வழிபடவும் வகை செய்யப்பட்டன. இருபுறம் சுவர் எழுப்பி மோதல் தவிர்க்கப்பட்டது.
1934: நாடு முழுவதும் இந்து - ¬முஸ்லிம் கலவரம். மசூதி சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது.
1949: மசூதியில் ராம விக்ரகம் தென்பட்டது. இந்துக்களால் சிலைகள் வைக்கப்பட்டன எனக் கூறி ¬முஸ்லிம்கள் எதிர்த்தனர். இதைத் தொடர்ந்து, இருதரப்பினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் பின், இரு தரப்பினரும் மசூதிக்குள் நுழையாதவாறு அரசு பூட்டுப் போட்டது. அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் என்று அறிவிக்கப்பட்டது.
1950: அயோத்தியில் சிலைகளை யாரும் அகற்றக்கூடாது என்று பைசாபாத் கோர்ட்டில் கோபால் சிங் விஷாரத் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். சுதந்திரத்துக்குப் பின், அயோத்தி தொடர்பாக கோர்ட்டுக்கு சென்ற ¬முதல் வழக்கு இது தான்.
1959: பிரச்னைக்குரிய இடத்துக்கு உரிமை கோரி, பைசாபாத் கோர்ட்டில் நிர்மோகி அகாரா வழக்கு.
1961: உ.பி.,யில் வக்பு சன்னி மத்திய வாரியமும், எட்டு ஷன்னி முஸ்லிம்களும் இணைந்து, டிச., 18ல், பைசாபாத் கோர்ட்டில் பிரச்னைக்குரிய இடத்தை தங்கள் வசம் தரும்படி வழக்கு.
1974: கோர்ட் உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரி குறித்து எழுந்த சர்ச்சையை அடுத்து புதிய அதிகாரி நியமனம்.
1984: ராமர் பிறந்த இடத்தை மீட்போம் என்ற கோஷத்துடன் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும், பிற அமைப்புகளும் வலுப்பெற ஆரம்பித்தன.
1986: மசூதியின் உள்ளே சென்று இந்துக்கள் வழிபடலாம் என்று மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ¬முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்.
1986: அயோத்தி தொடர்பான வழக்குகளை விரைந்து ¬முடிக்க வேண்டும் எனக் கோரி ஐகோர்ட்டில் உ.பி., அரசு மனு செய்தது. "பாபர் மசூதி நடவடிக்கைக் கமிட்டி' உருவானது.
1987: மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையிலிருந்த வழக்குகளை உ.பி., அரசு வாபஸ் பெற்று அவற்றை விரைந்து ¬முடிக்க ஐகோர்ட்டில் தாக்கல்.
1989: சர்ச்சைக்கு உட்பட்ட இடம் அனைத்தும், கோவில் என அறிவிக்க வேண்டும் என்று பக்தர்கள் வழக்கு. இது தொடர்பாக பைசாபாத் கோர்ட்டில் நிலுவையில் இருந்த நான்கு வழக்குகளும் மூன்று நீதிபதிகள் கொண்ட
அலகாபாத் ஐகோர்ட் பெஞ்சுக்கு மாற்றம்: ராமர் கோவில் கட்டியே தீருவோம் என்ற கோஷத்துடன் புறப்பட்ட வி.எச்.பி., அமைப்பினர், சர்ச்சைக்குரிய இடத்துக்கு அருகில் கோவிலுக்கான அடிக்கல் (சிலாநியாஸ்) நாட்டினர். அதைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் பலி.
1990: வி.எச்.பி., தொண்டர்களால் மசூதி சிறிதளவு சேதப்படுத்தப்பட்டது. அப்போதைய பிரதமர் சந்திரசேகர், பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை சரிசெய்ய முயற்சித்தார். ஆனால் அது தோல்வியில் ¬முடிந்தது.
1991: மசூதி மற்றும் சர்ச்சைக்குரிய பகுதியின் மையப்பகுதியில் 2.77 ஏக்கர் நிலத்தை உ.பி., அரசு கையகப்படுத்தியது. அதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு. அரசே அந்த இடத்தை வைத்திருக்கலாம், ஆனால் அந்த இடத்தில் எவ்வித கட்டுமானப் பணிகளையும் நடத்தக்கூடாது என்று கோர்ட் உத்தரவு. அயோத்தியில் சர்ச்சைக்கு உட்பட்ட பகுதிகளை அரசு கையகப்படுத்தியது. உ.பி.,யில் நடந்த தேர்தலில் பா.ஜ., ஆட்சியைப் பிடித்தது.
1992: டிசம்பர் 6ல் மசூதி இடிக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டாயிரம் பேர் பலி.
1994: விசாரணை நீதிமன்ற உத்தரவு வரும்வரை அயோத்தியின் சர்ச்சைக்கு உட்பட்ட பகுதியில், எந்த கட்டுமானப் பணிகளோ அல்லது வழிபாடோ இருக்கக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
1996: மசூதி இடிப்பு தொடர்பான சாட்சிகள் மீதான விசாரணை.
1998: வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ., கூட்டணி அரசு பதவியேற்பு.
2001: அயோத்தி இடிக்கப்பட்ட நினைவு தினத்தில், அவ்விடத்தில் கோவில் எழுப்ப வி.எச்.பி., உறுதி. மார்ச் 12ம் தேதி கோவில் கட்டும் பணி துவங்கும் என்று அறிவித்தது.
2002 ஜனவரி: அயோத்தி தொடர்பான பிரச்னைக்கு என, சத்ருகன் சிங் தலைமையில் ஒரு அலுவலகத்தை பிரதமர் வாஜ்பாய் உருவாக்கினார். அது இந்து - ¬முஸ்லிம் தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியதால், உருவானது. அதில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை.
2002 பிப்ரவரி: உத்தரபிரதேச சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், ராமர் கோவில் கட்டப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. கோவில் கட்டுமானப் பணிகளை மார்ச் 15ம் தேதிக்குள் ஆரம்பிக்க வேண்டும் என, வி.எச்.பி., கெடு விதித்தது. நூற்றுக்கணக்கான மக்கள் சர்ச்சைக்குரிய இடத்தில் குவிந்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் கோத்ராவில் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 58 பேர் பலியாயினர்.
2002 மார்ச்: குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமானோர் பலி.
2002 ஏப்ரல்: சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என முடிவு செய்ய, ஐகோர்ட்டில் மூன்று நீதிபதிகள் தலைமையில் குழு விசாரணை துவங்கியது.
2003 ஜனவரி: கோர்ட் உத்தரவுப்படி, சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் குறித்து தொல்லியல் துறை நிபுணர்கள் ஆய்வு.
2003 ஆகஸ்ட்: தொல்லியல் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில், மசூதி இருந்த இடத்தில் கோவில் இருந்ததற்கான சான்றுகள் இருந்ததாக தெரிவித்தனர்.
2003 செப்டம்பர்: பாபர் மசூதி இடிப்பில் ஏழு இந்து தலைவர்களுக்கு தொடர்ப்பு இருப்பதாகவும், ஆனால் அத்வானிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனவும் கோர்ட் அறிவித்தது.
2004 அக்டோபர்: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் பா.ஜ., உறுதியாக இருப்பதாக அத்வானி தெரிவித்தார்.
2004 நவம்பர் : மசூதி இடிப்பு வழக்கில் அத்வானிக்கு தொடர்பு இல்லை என அறிவித்ததை மறுபரிசீலனை செய்ய கோர்ட் முடிவு.
2005 ஜூலை: சர்ச்சைக்குரிய இடத்தின் வளாகச் சுவரில் வெடி பொருட்கள் ஏற்றிய ஜீப்பை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஆறு பேரை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
2009 ஜூலை: பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணைக்காக அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் தன் அறிக்கையை 17 ஆண்டுகள் கழித்து சமர்ப்பித்தது. இந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
2010 செப்டம்பர் 30ல்: அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம் என்பது பற்றி அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு.
இரு வேறு கருத்துக்கள்: அயோத்தி விவகாரம் கடந்த 1885ம் ஆண்டு முதல் நீடித்து வரும் சர்ச்சைக்குரிய விஷயமாக இருக்கிறது. இத்தீர்ப்பு வரும் நேரத்தில் இது குறித்து இரு வேறுபட்ட கருத்துக்கள் வருமாறு: யோகி ஆதித்யநாத்(எம்.பி.,): அயோத்தி என்றாலே ராமர் பிறந்த இடம் தான். இதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. ராமர் கோவிலுக்குரிய நிலம் வேண்டி நடந்த 76 போராட்டங்களில் ஏராளமான இந்துக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பது காங்கிரஸ் கட்சிக்கு நன்றாக தெரியும். தெரிந்தும் இந்துக்களின் உணர்வுகளோடு இந்த கட்சி விளையாடுகிறது. பாபர் மசூதி செயற்குழு வக்கீல் சபர்யாப் ஜிலானி: தற்போதுள்ள இடத்தில் ராமர் பிறந்தாரா? எப்போது பிறந்தார் என்பதல்ல தற்போதைய சர்ச்சை. ராமர் சிலை உள்ள இடம் யாருக்கு சொந்தம் என்பது தான் தற்போதைய பிரச்னை. 160 சதுர அடியும் பாபர் மசூதி இருந்ததாக கூறவில்லை. 80 அல்லது 90 சதுர அடியில் தான் பாபர் மசூதி இருந்தது.
தீர்ப்பைக் கேட்பதில் குழப்பமோ, குழப்பம்: தீர்ப்பு விவரத்தை தெரிந்து கொள்வதற்காக, பத்திரிகையாளர்கள் உட்பட மீடியா பிரதிநிதிகள் ஐகோர்ட்டிற்கு வரவேண்டாம். இதற்காக சிறப்பு ஏற்பாடு லக்னோ கலெக்டர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளது. தீர்ப்பு தொடர்பான அறிவிப்பை ஐகோர்ட்டால் நியமிக்கப்படும் பிரதிநிதி அறிவிப்பார் என குறிப்பிடப்பட்டு இருந்தது. வழக்கு விசாரணையின் போது நடந்த வாதபிரதிவாதங்களை விளக்குவதற்காக, ஆஜரான வக்கீல்கள், கலெக்டர் அலுவலக மீடியா சென்டருக்கு அழைத்து வரப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று பிற்பகல் 4 மணி முதல், நாட்டின் ஒட்டு மொத்த பார்வையும் லக்னோவில் உள்ள மீடியா சென்டரை நோக்கி இருந்தது. 4.35 மணிக்கு, வக்கீல்கள் கூட்டமாக வந்தனர். சிலர், வெற்றிச் சின்னத்தை பிரதிபலிக்கும் வகையில் இரண்டு விரல்களை காட்டியபடி வந்தனர். தீர்ப்பு வெளியாகிவிட்டதோ என்று பத்திரிகையாளர்கள் குழம்பிப் போயினர். இருபதுக்கும் மேற்பட்ட வக்கீல்கள், வழக்கு விசாரணையின் போது தாங்கள் எடுத்துவைத்த வாதங்களை வாசித்தனர். ஆளாளுக்கு பலரும் பேசியதால் குழப்பமான சூழ்நிலை நிலவியது. ஒரே நேரத்தில் பலரும் பேசி குழப்பினர். தீர்ப்பு தொடர்பான செய்தியை சேகரிப்பதற்காக நாடு முழுவதிலிருந்தும் 600 பத்திரிகையாளர்கள், லக்னோவில் குழுமியிருந்தனர். நேரடியாக ஒளிபரப்புவதற்காக 40க்கும் மேற்பட்ட வெளிப்புற படப்பிடிப்பு (ஓ.பி.,) வேன்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு இருந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக