தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

9/29/2010

உண்மை பேசினாலும் தண்டனை

சாயங்கால வேளையிலே
சாலையின் ஓரத்திலே
சனங்களின் மத்தியிலே
சங்கமித்து நின்றிருந்தேன்

வானத்து தேவதை ஒருத்தி
வழி தவறி வந்தது போல்
மலர் போன்ற பெண்ணொருத்தி
என்னருகே பூத்து நின்றாள்

மின்னற் பார்வை
என் மீது அவள் பாய்ச்ச
இடி இறங்கியது போல
நான் நின்றேன்

புயல் போன்ற அந்த தென்றல்
என்னை நெருங்கியது
சருகு போன்ற என் மனம்
அதில் நொறுங்கியது

அருகில் வந்தவளை
"அன்பே" என்றேன்
"சொல்" என்றாள்
அவள் பார்வையிலே

உண்மையை சொல்லவா?

தூண்டிலில் சிக்கிய மீனை அறிந்திருக்கிறேன்
ஆனால்,
மீனிடம் சிக்குமாம் தூண்டில் என்று
இன்று தான் உணர்ந்தேன்
உன் மீன் விழி பார்வையில் நான் சிக்கிய போது

தாமரை மொட்டு இதழ் விரித்து மலர்வது போல்
உன் செவ்விதழ் மொட்டு
இதழ் விரித்து மலர்ந்தால்
அது உன் சிரிப்பு என்பேன்

யாம் அறிந்த மொழிகளிலே தமிழை போல
இனிது எங்கும் இல்லை என்று பாரதி சொன்னான்
சத்தியம் என நானும் ஒப்புக்கொள்கிறேன்
உன் தேனிசை குரலில் தமிழை கேட்ட பிறகு

தோட்டத்தில் பூக்களை பார்த்திருகிறேன்
ஆனால், நீர்வீழ்ச்சியிலும் பூக்கள் பூப்பதை
இன்று தான் பார்கிறேன், உன் கூந்தல் அலையில்
பூக்கள் சிக்கியதை பார்த்த பிறகு

புயலாக வந்த காற்று கூட
உன் தாவணியில் பட்டவுடன்
தென்றலாக மாறி சென்றதை
இன்று தான் பார்த்தேன்

இவ்வளவு ஏன்?

காதல் வந்தால்
கட்டெறும்பும் கவிதை பாடும்
என்பதனை
உன்னால் தான் நான் உணர்ந்தேன்

என் மன கதவை
உனக்காக திறந்து விட்டேன்
பதில் சொல்ல
உள்ளே வருவாயா என்றேன்

மௌனம் பேசியது

"இத்தனை அழகு எனக்குண்டு என்பதனை
இதனை நாள் நான் அறியேன்
இன்றதனை அறிந்தபின் தான் நான் உணர்ந்தேன்
எனகேற்றவன் நீயில்லை"
என கூறி விலகி சென்றாள்

ஒ! உலக இளைஞர்களே,

இன்று ஒரு தகவல்

"உண்மை பேசினாலும் தண்டனை"

கருத்துகள் இல்லை: