தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

9/20/2010

அண்ணா உன் கடிததிற்க்கு பதில்


அனுப்புனர் ,
            பாசமுள்ள தங்கை
            சொர்கம்
பெருநர்
          என் ப்ரியமான அண்ணா ........
           நரகம்

அன்புள்ள அண்ணன்  உங்கள் அன்பில் வாழ வாய்க்காத தங்கை எழுதுவது........
      இங்கு நான் நம் பாட்டைய்யா,அப்பத்தா,தாத்தா,மாமா அனைவரும் நலம்.அங்கு நீ,நம் அப்பா அம்மா அனைவரும் நலமா?
            பிறந்து 25 நாளில் இறந்த நான் சொர்கத்தில் தான் இருப்பேன் என்று நீ நம்புகிறாய்.ஆம் உண்மை தான் அண்ணா........ நான் சொர்கத்தில் தான் இருக்கிறேன்.ஆனால் இதை விட சுகமான சொர்கமாக நம் அம்மா அப்பா மற்றும் நீ உங்களின் மனமும் நிழலும் தான் என நினைக்கிறேன்.இதில் வாழ இயலாத எனக்கு இந்த சொர்க்கம் இனிக்கவில்லை அண்ணா.........
          ஆம் அண்ணா நானும் அந்த கடவுளை சாடுகிறேன்.அங்கு எத்தனை கொடுமைகளும் கொடூரங்களும் நடந்தால் என்ன?அண்ணா என்ற அஸ்திவாரதிற்க்கு முன் அவை பொடிபொடியாக அல்லவா நசங்கிவிடும்.உன் அன்பிலும் அரவணைப்பிலும் என்னை வாழ பணிக்காத அந்த கடவுளை நான் சாடுகிறேன்........
          நீ தாய்மாமன் சீர் செய்ய விரும்பினால் பிறந்த நொடியே தூக்கி எறியபட்ட அபலை தங்கைகள் ஏராளம்..இது தூக்கி எறியும் தாய்மார்களின் தாராளம்.அந்த அபலை தங்கைகளுக்கு அண்ணாக இருந்து வருடத்திற்க்கு ஒரு முறை சீர் செய் அண்ணா வசதி இருந்தால் வாய்க்கும் போதெல்லாம்.
                  எனக்கும் உன்னுடன் மோட்டார் பைக்கில் கல்லூரி வாசலில் இறங்க ஆசை..... கம்பிரமாக வரும் உன்னை கண்டு என் தோழிகள் உன் மேல் காதல் கொள்ள ஆசை அதை கண்டு இவன் என் அண்ணன் என கர்விக்க எனக்கு ஆசை....... என்னை காதலுடன் காணக் கூட காளையர்கள் அஞ்சுவதை கண்டுவிட ஆசை...... வேணாம்டா அவ  தங்கை அவ அண்ணனுக்கு தெரிஞ்சா நம்மள கொன்னுடுவான் என்று அவர்கள் பேசுவதை கேட்க ஆசை.........இதையெல்லாம் இந்த சொர்கம் தரவில்லை அண்ணா இங்கு ஆட்கள் உண்டு அமைதி உண்டு ஆனால் அன்பு மட்டும் இல்லை அண்ணா.........
           ஆம் அண்ண நான் இருந்திருந்தால் உன் காதலுக்கு உதவி செய்திருப்பேன் அதை காரணம் காட்டி உன்னை மிரட்டி உன்னிடம் என்னகு காசு,உடை,சாக்லெட் இப்படி நிறைய செலவும் வைத்திருப்பேன்.........என் அண்ணிக்கு நீ வாங்கி தந்த புடவை எனக்கு வேண்டுமென்று பொய்ச் சண்டை போட்டிருப்பேன்.........உங்களுடன் திரையரங்கத்திற்க்கு வந்து உங்கள் இருவருக்கு இடையில் அமர்ந்து உங்கள் முகம் போகும் போக்கை கண்டு ரசித்திருப்பேன்...... இந்த சின்ன சின்ன ரசனைகளும் ஆசைகளும் ஏக்கங்களும் இந்த சொர்கத்தில் தீர்வதும் இல்லை கிடைப்பதும் இல்லை அண்ணா.......இங்கிருக்கும் எனக்கு உன்னிடம் ஒரு விண்ணப்பம் அண்ணா உனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் விரைவில் அதை குறைத்து கொண்டு விட்டு விடு அண்ணா....... நான் அங்கில்லாமல் இங்கிருந்தாலும் உன் மீது எனக்கு அக்கறை உண்டு. நம் அம்மா அப்பாவுக்கு எல்லாமே நீ தானே அண்ணா......உன் உடல் நலத்தில் எதேனும் குறை ஏற்பட்டால் அவர்கள் மொத்த சந்தோஷதையும் நிம்மதியையும் இழந்து விடுவார்கள் அண்ணா........
சொர்கம் பூமியிலோ வானத்திலோ இல்லை அண்ணா நாம் வாழும் வாழ்க்கையிலும் நல்ல பண்புகளிலும் செயல்களிலும் தான் உள்ளது.........
       எனக்கு ஒரு ஆசை அண்ணா எனக்கு சீக்கிரம் ஒரு பெயர் வைங்கண்ணா...................
இப்படிக்கு ப்ரியமுடன் தங்கை

கருத்துகள் இல்லை: