தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

9/12/2010

இவரை மாதிரி வாழ்ந்தவனும் , வீழ்ந்தவனும் இல்லை.-சந்திரபாபு,


ந்திரபாபு என்ற பேரை கேட்டாலே நம் நினைவுக்கு வருவது முக்கியமா அவரது பாடல்கள் தான் நான் ஒரு முட்டாளுங்க,... புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை...... குங்கும பூவே கொஞ்சு புறாவே.......
எனக்கு அவர் பாடிய அனைத்து பாடல்களுமே பிடிக்கும், அவரின் வாய்ஸ் நம் அனைவர்க்கும்  ஈர்த்து வந்துள்ளது என்றால் அது மிகையில்லை. எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத காலத்தால் அழியாத பாடல்கள் அவை.
நான் சந்திரபாபுவின் வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள திரு.முகில் எழுதியுள்ள கண்ணிரும் புன்னகையும் என்ற புத்தகத்தை வாங்கி ஒரே மூச்சில் படித்தேன். அப்போது தான் சந்திரபாபு மாதிரி ஒருத்தன் வாழ்ந்ததும் இல்ல வீழ்ந்ததும் இல்லை என்று அறிந்து கொண்டேன்.

சந்திரபாபு பொதுவாகவே மேல்நாட்டு பாணியில் இருக்க விரும்புவார், ஸ்டைல்ஆக இங்கிலீஷ் பேசுவார் அவர் எவ்வளவு பெரிய மனிதர்கள் ஆயினும் மிஸ்டர் என்று சொல்லியே அழைப்பார் (எம்.ஜி.ஆரை கூட அவ்வாறே அழைப்பார்) யாருக்கும் பயப்பட மாட்டார். காக்க பிடிக்க மாட்டார். மனதில் பட்டதை பேசும் குணம் கொண்ட அவருக்கு இதனால் எதிரிகள் அதிகம் ஆயினர். அவருக்கு அவரின் திருமண வாழ்வு சந்தோசத்தை தரவில்லை அதனால் குடி பழக்கத்துக்கு ஆளானர்.
***********************************************************
(அதனால் கொஞ்சம் சிரமம் பாராமல் லிங்கை கிளிக் செய்து சந்திரபாபு வீடியோவை கண்டு ரசிக்கவும்.)
http://www.youtube.com/watch?v=Upso-wCi0Cs
http://www.youtube.com/watch?v=xVnP2aXmO4I
http://www.youtube.com/watch?v=Hia6FsJBNtk
**********************************************************
சிவாஜியிடம் சபாஷ் மீனா கதை சொன்னார் தயாரிப்பளார், அந்த காமெடியன் வேடத்தில் சந்திரபாபு தவிர வேறு யாரும் நடிக்க முடியாது என்று கூறி சந்திரபாபுவை புக் பண்ண சொன்னார் சிவாஜி,
சந்திரபாபுவிடம் கதை சொன்னார் தயாரிப்பளார்.
உடனே சந்திரபாபு "யார் ஹீரோ ?"...
"சிவாஜி கணேசன்" என்று பதில் வந்தது.
"கணேசன், he is a good actor, எனக்கு என்ன சம்பளம்"? என்று கேட்டார் சந்திரபாபு."நீங்க எவ்வளவு எதிர்பார்க்கிரிங்க?" அப்படினார் தயாரிப்பளார் .சந்திரபாபு "சிவாஜிக்கு என்ன சம்பளம்?"
"ஒரு லட்சம்"
"அப்போ எனக்கு லட்சத்தை விட ஒரு ரூபாய் அதிகம் தாங்க, ஒரு லட்சத்தி ஒரு ரூபாய்."
தயாரிப்பளார் டர்ராகி சிவாஜியிடம் வந்து விவரத்தை கூறினார்.உடனே சிவாஜி "அவன் கேக்குறத கொடுத்துடுங்க இதுல அவனுக்கு நல்ல scope இருக்கு, அவன் நடிச்சாதான் நல்ல வரும்" தயாரிப்பளாரும் அந்த சம்பளத்தை கொடுக்க ஒத்து கொண்டார். படமும் சூப்பர் ஹிட். .. அந்த படத்தை பார்த்துதான் நம்ம சுந்தர்.சி அவர்கள் உள்ளதை அள்ளித்தா
என்ற படத்தை எடுத்து வெற்றியும் அடைந்தார். இரண்டு படங்களிலும் வெற்றிக்கு காரணம் காமெடி ஜாம்பவான்கள் சந்திரபாபுவும், கவுண்டமணியும் என்றால் அது மறுப்பதற்கு இல்லை.
***********
நான் கண்ணதாசனின் புத்தகங்களை படித்ததில் கண்ணதாசன் சந்திரபாபுவால் பாதிக்க பட்டுள்ளதாக அடிக்கடி கூறுவார். கண்ணதாசன் அவர்கள் தயாரித்த கவலை இல்லாத மனிதன் படத்துக்கு சந்திரபாபு சரியாக படபிடிப்புக்கு வருவதில்லை, வீட்டில் இருந்து கொண்டே இல்லை என்று வேலைகாரர்கள் மூலம் சொல்லி அனுப்பிவிடுவார் என்றும், எம்.ஜி.ஆர் அவர்கள் தலையிட்டு பின்பு தான் சந்திரபாபு ஒழுங்காக நடித்து கொடுத்தார் என்று கண்ணதாசன் அவர்கள் எழுதியுள்ளார். கடைசியில் கவலை இல்லாத மனிதன் படத்தை தான் எடுத்து உலகத்தில் தன்னை கவலை உள்ள மனிதனாக ஆக்கி விட்டது என்பார் கண்ணதாசன்.
**************
திரையுலகில் யாரும் கட்டாத அளவுக்கு வீடு கட்டினார் சந்திரபாபு மாடி வழியே வீட்டுக்குள்ளையே காரை நிறுத்தும் அளவுக்கு பெரிதாக கட்டினார். பிறகு மாடி வீட்டு ஏழை என்ற படத்தை தயாரித்து இயக்க விரும்பினார் இதற்காக எம்.ஜி.ஆர் அவர்களை புக் செய்தார். ஆனால் எம்.ஜி.ஆர் சந்திரபாபு படத்துக்கு ஒத்துழைப்பு தராததால் சந்திரபாபு தன் சொத்துக்கள் அத்தனையும் இழந்தார். குடியால் அவருக்கு படங்களும் குறைந்தன கடைசியில் அவர் 1974ஆம் ஆண்டு இந்த மண்ணுலகை 
விட்டு பிரிந்தார். சந்திரபாபு மறைந்தாலும் தன் பாடல்களால் அவரின் நடனத்தால் அவரின் காமெடியினால் அவர் இன்னும் நம்முள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்......... 

கருத்துகள் இல்லை: