தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

3/18/2010

அணிக்காகவே ஆடுகிறேன்.. சாதனைகள் தானாய் வருகின்றன! –{வாசகரின் சிறந்த கருத்து }

சென்ற மாதம் நமது வலைப்பூவில் நடந்த சச்சினுக்கு வாக்கு மற்றும் கருத்து போட்டியில் வெற்றி பெற்ற வாசகரின் சிறந்த கருத்து வாசகரான நமது பார்வைக்கு இதோ...


நமது பிளாக்கில் என்னெற்ற வாசகரின் கருத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன ,அதில் சிற்ந்த கருத்து மற்றும் நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவை தான் இறுதி ....


ஆதரவளித்த மற்றும் ஒத்துழைப்பு தந்த அத்தனை நல் உள்ளங்களுக்கு அன்பு கலந்த கோடான கோடி நன்றிகள் ,நன்றிகள்..............மேலும் நமது வலைப்பூவுக்கு தங்களின் மேலான நல் ஆதரவை நாடும் என்றென்றும் தமிழ் உலகம் வலைப்பூ.


அணிக்காகவே ஆடுகிறேன் சாதனைகள் தானாய் வருகின்றன
டெண்டுல்கள் அசத்தல் பேட்டி
இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இப்படியொரு சாதனையைச் செய்ய வேண்டும் என்ற இலக்கு வைத்து நான் ஆடவில்லை. அணிக்காக ஆடியபோது இந்த சாதனை படைக்க முடிந்தது. 20 ஆண்டுகளாக எனது ஆட்டத்தை ரசித்து உற்சாகப்படுத்தும் என் நாட்டு மக்களுக்கு இந்த சாதனையை அர்ப்பணிப்பதை சிலிர்ப்பாக உணர்கிறேன்!” என்கிறார் கிரிக்கெட் சாதனையாளர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.
40 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை தெண்டுல்கர் சாத்தியப்படுத்தியுள்ளார். குவாலியரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் அவர் ரசிகர்களுக்கு வைத்த ரன் விருந்து வாழ்நாளில் எந்த கிரிக்கெட் ரசிகரும் மறக்க முடியாதது.
உலகமெங்கிலுமிருந்து சச்சினுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்தவண்ணம் உள்ளன.
சச்சினைப் போலவே பல சாதனைகள் புரிந்த சர் விவியன் ரிச்சர்ட்ஸ் தொடங்கி, சச்சின் பெரிதாய் மதிக்கும் ‘டார்லிங் ஆஃப் கிரிக்கெட்’ பிரையன் லாரா வரை பாராட்டு மழை பொழிந்துவிட்டார்கள் சச்சின் சாதனைப் பற்றி.
இந்த நிலையில், இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் டெண்டுல்கர். அவர் கூறுகையில், “இரட்டை சதம் அடிப்பேன் என்று நான் நினைக்கவே இல்லை. 175 ரன்னை தொட்ட போதுதான் எனக்கு அந்த ஆர்வம் ஏற்பட்டது. அப்போது 42 ஓவர்தான் முடிந்து இருந்தது. இந்த வாய்ப்பு கிடைத்ததும் ஒவ்வொரு ரன்னாக எடுக்க முடிவு செய்தேன். ஏனென்றால் மறுமுனையில் டோனியின் அதிரடி ஆட்டத்தை வெகுவாக ரசித்தேன்.
200 ரன்னை அடித்ததை எப்படி உணர்வது என்றே உண்மையில் எனக்கு தெரியவில்லை. இது என் மகிழ்ச்சி என்பதைவிட என் நாட்டு மக்களின் மகிழ்ச்சி என்பதே உண்மை. எனது ஆட்டத்தில் அவர்கள் தங்களைப் பார்ப்பது புரிகிறது. 20 ஆண்டு காலமாக எனக்குஅப்படித்தான் அவர்கள் ஆதரவு தந்து வருகிறார்கள். எனவே எனது இந்திய மக்களுக்கு இந்த இரட்டை சதத்தை அர்ப்பணிக்கிறேன்.
இன்னொரு பக்கம் எனது ஆட்டம் எனக்கே மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. பந்து சரியான முறையில் மட்டையில் பட்டது.
சாதனைக்காக நான் ஆடவில்லை. அணிக்காக ஆடும்போது அது தானாகவே நடக்கிறது. நான் எப்போதுமே சாதனைக்காக ஆடியது கிடையாது. மற்றெல்லா பெருமைகளிலும் இந்தியன் என்ற பெருமையே முக்கியம். இந்த 200 ரன்களால் என் தேசம் பெற்ற மகிழ்ச்சியை பாக்கியமாகக் கருதுகிறேன்.
எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் அனைவரையும் மதிக்கிறேன். அவர்களது வாழ்த்து எனக்கு மிகவும் முக்கியம்.
நான் 199 ரன்னில் இருந்த போது மனநெருக்கடி எதுவும் இல்லை. இயல்பாகவே இருந்தேன். அதேபோல 50 ஓவர்கள் நான் களத்தில் நின்றது மகிழ்ச்சியை தருகிறது. எனது உடல் தகுதிக்கு கிடைத்த நல்ல சோதனையாகும்.
நான் 150 ரன்னில் இருந்த போது 350 முதல் 360 ரன் வரை எடுக்க முடியும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் யூசுப்பதானும், டோனியும் அதிரடியாக ஆடி 400 ரன்னை குவிக்க காரணமாக இருந்தார்கள். யூசுப்தான் ஆட்டத்தை மாற்றினார். டோனி அருமையாக நிறைவு செய்தார். தினேஷ் கார்த்திக் பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது… என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இது..
இன்னொன்று… இது எனது தனிப்பட்ட விருப்பமும் கூட… முறியடிக்க முடியாத சாதனை என்று எதுவும் இல்லை. முறியடிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. எனது சாதனைகளை இந்தியர் ஒருவரே முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்…” என்றார் டெண்டுல்கர்.
இதற்கிடையே, சச்சின் சாதனை செய்ததை கவுரவிக்கும் விதத்தில் குவாலியரில் உள்ள ஹூரவாலி சாலைக்கு சச்சின் டெண்டுல்கர் பெயர் சூட்டப்படுவதாக மத்திய பிரதேச முதல்வர்
சௌஹான் அறிவித்துள்ளார்.
ஐ.நா.: ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்திய கிரிக்கெட்டின் தன்னிகரற்ற வீரராகப் போற்றப்படும் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.
ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட (UNEP)த்துக்கு இனி இவர்தான் தூதுவராக செயல்படுவார்.
சர்வதேச கிரிக்கெட்டின் பல சாதனைகளை உடைத்தவர், நாளும் ஒரு சாதனை படைத்து வருபவர் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்.
கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் என்றால் அது சச்சின்தான்.


இந்த உலகுக்கு எனது பங்களிப்பு…. – சச்சின்
இதுகுறித்து சச்சின் கூறுகையில், “இதுவரை உலகம் முழுவதும் நான் விளையாடியுள்ளேன். எனது கிரிக்கெட்டை பல்வேறு நாடுகளில் அனுபவித்து வந்தேன். இப்போது இந்த உலகுக்காக எனது பங்கை செலவிடும் நேரம் வந்துள்ளது.
உலகைக் காக்கும் முயற்சிகளில் அனைவருக்கும் பங்குண்டு. இது நமது வீடு. சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது மிகவும் சவாலானது. ஆனால் அந்த சவாலை ஏற்க நான் தயாராகி விட்டேன். யுஎன்இபியுடனும், உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுடனும் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளேன். அனைவரும் ஒருங்கிணைந்தால் பல அற்புதங்களைப் படைக்க முடியும்,” என்றார்.

நன்றி : திரு சிவகுமார் -கோவை

கருத்துகள் இல்லை: