தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/25/2010

ஒரு வார்த்தை

உலகில் எல்லோருக்கும் தினமும் பலமுறை
சொல்லும் அற்புதமான வார்த்தை
எத்தனையோ பேருக்கு தினமும்
நாம் சொல்லும் வார்த்தை..
நம்முடைய மனதில் சந்தோஷத்தை
வெளிப்படுத்தும் ஒரு வார்த்தை
கடைசி வரை சொல்லியே ஆக வேண்டிய ஒரு வார்த்தை
உலகம் முழுவதிலும் எல்லா மொழிகளிலும் மிகச் சிறந்த ஒரு வார்த்தை
எத்தனையோ பேருக்கு சொல்லும் வார்த்தை
சில விஷயங்களுக்கும் சிலருக்கும்
சொல்ல மறந்த ஒரு வார்த்தை


அந்த வார்த்தை... நன்றி
இனி சொல்வாய்....
இன்றிலிருந்து சொல்வாய்...
இப்பொழுதிலிருந்து சொல்வாய்...
சொல்லிப் பார்..


கண்களே உன்னால் நான்
உலகைப் பார்க்கிறேன் உங்களுக்கு நன்றி
காதுகளே உங்களால் நான் கேட்கிறேன்
உங்களுக்கு நன்றி
மூக்கே உன்னால் நான் சுவாசிக்கிறேன்
உனக்கு நன்றி
வாயே உன்னால் நான் பேசுகிறேன்
உனக்கு நன்றி
கைகளே உன்னால் நான்
வேலை செய்கிறேன்
உங்களுக்கு நன்றி
கால்களே உங்களால் நான் நடக்கிறேன்
உங்களுக்கு நன்றி
பூமியே உன் மடி மீது வாழ்கின்றேன்
உனக்கு நன்றி
மேகமே உன்னால் மழையை
அனுபவிக்கின்றேன் உனக்கு நன்றி
சூரியனே உன்னால்
வெளிச்சத்தை உணர்கின்றேன்
உனக்கு நன்றி
சந்திரனே உன்னால் இருளும்
அழகாகின்றது உனக்கு நன்றி
ஆகாரமே உன்னால் பலமடைகின்றேன்
உனக்கு நன்றி
எழுதுகோலே உன்னால் எழுதுகிறேன்
உனக்கு நன்றி
தாயே உன்னால் உலகில் பிறந்தேன்
உனக்கு நன்றி
தந்தையே உன்னால் உற்பத்தி ஆனேன்
உனக்கு நன்றி
வயதானவர்களே உங்களின் அனுபவத்தில்
பல கற்றுக்கொண்டேன் உங்களுக்கு நன்றி
தோழர்களே/தோழிகளே உங்களால்
நட்பை அனுபவிக்கிறேன்
உங்களுக்கு நன்றி
சகோதரர்களே/சகோதரிகளே உங்களால்
சகோதரத்துவத்தை ரசிக்கிறேன்
உங்களுக்கு நன்றி
ஆசிரியர்களே உங்களால் அறிவு
பெறுகிறேன் உங்களுக்கு நன்றி
புத்தகமே உன்னால் படிக்கிறேன்
உனக்கு நன்றி
மொழிகளே உங்களால் என் மனதை
வெளிப்படுத்துகின்றேன்
உங்களுக்கு நன்றி


இது போல் இன்னும் கோடி பேருக்கு
கோடி விஷயங்களுக்கு நன்றி
சொல்ல மறந்து விட்டோம்

இனி மறக்காமல் சொல்
சொல்ல சொல்ல சுகமாய் இரு

இன்னும் சில நன்றிகளும்
மறக்காமல் சொல்ல வேண்டும்
கடவுளே  உன்னால் நானும்
சுத்தமாகிறேன் உனக்கு நன்றி
பக்தர்களே உங்களால் நானும்
பக்தி செய்கிறேன் உங்களுக்கு நன்றி
பக்தியே உன்னால் நான் பகவானை
உணர்கின்றேன் உனக்கு நன்றி
ஞானிகளே உங்களால் ஞானத்தை
தெரிந்து கொள்கிறேன் உங்களுக்கு நன்றி

கடவுளே  உன்னால் தான்
இவை எல்லாவற்றையும் நான்
அனுபவிக்கின்றேன் உனக்கு நன்றி


கருத்துகள் இல்லை: