தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/15/2010

என் நாட்டுக்கு என்ன செய்தேன் ?
மூன்று பக்கங்கள் இந்திய
அரசியலை சாடி எழுதியிருந்ததை
பற்றி கிழித்துபோட்டுவிட்டேன்

நாட்டில் ஒரு  ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு
வெட்டியாய் எழுதி கிழிக்கமட்டும்தான்
எனக்கு தெரிந்திருக்கிறது


இலக்கணம் மீறாமல் காதல் கவிதைகள்
எழுத தெரிந்த எனக்கு

ஒருநிமிடம் எந்த பக்கங்களையும்
புரட்டாமல் இந்திய தேசிய கீதத்தை
தப்பில்லாமல் எழுதவோ சொல்லவோ
தெரிந்திருக்கவில்லை

வெட்கி கூசி கூனி குருகிப்போனேன்
எனக்கென்ன தகுதியிருக்கிறது

இது எத்தனையாவது சுதந்திர தினம்
என்று கூட தெரிந்திருக்கவில்லை

ஆனால் வாய் கிழிய சுதந்திரத்தை
வீணடிப்பவர்களைப்பற்றி
வீணாய் பேசியிருக்கிறேன்...

இந்தியாவில் பசுமை புரட்சி
வேண்டும் என்று காகிதங்களில்
 பக்கம் பக்கமாய் எழுதியிருக்கிறேன்


அந்த பசுமை காணாமல்
போவது காகிதத்தில்தான்
என்றுகூட தெரியாமல்..

இந்த சுதந்திரம் கிடைத்திருக்காவிடின்
என்னால் இப்படி சுதந்திரமாக
எதையும் எழுத முடிந்திருக்காது


இந்தியாவைச்சாடி எழுத
முன்னூற்றி அறுபத்தி நான்கு
நாட்கள் இருந்த பொழுதும்
மீதியிருக்கும் இன்று ஒரு நாள் மட்டுமேனும்
இந்தியாவை போற்றி பாடுகிறேன்

எத்தனை உயிர்கள் இழந்து
பெற்ற என் தாய் நாட்டின்
சுதந்திரத்தை எல்லை சென்று
காக்கமுடியாவிடினும்
போற்றுகிறேன் வாழ்க இந்தியா


வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்...!

கருத்துகள் இல்லை: