தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/02/2010

தாய்த்தமிழ் பிறந்திருக்கிறது... 2      தொலைக்காட்சியைத் தொடர்ந்து ஊடகங்களில் அடுத்து இடம் வகிப்பதுசெய்தித்தாள்கள். ஒரு பிரபலமான தமிழ் செய்தித்தாளின் விளம்பரத்தைக் கூடஅவர்களால் ஆங்கிலம் கலக்காமல் எடுக்க முடியவில்லை. "நம்பர் ஒன் நம்பர்ஒன் தமிழில்..........நம்பர் ஒன்" என்றுதான் எடுத்துள்ளனர்.


பல தமிழ் நாளிதழ்கள் இன்று வியாபார நோக்கத்தில்மட்டுமே வெளி வருகின்றன. இன்று நகர்ப் புறங்களில்வசிக்கும் தமிழர்களில் எத்தனை பேர் தமிழ் நாளிதழ்வாங்கிப் படிக்கிறோம். ஏன் நான் பணிபுரிந்த அலுவலகத்தில்  கூட
ஆங்கில  நாளிதழ் தான். தமிழ் நாளிதழை தேனீர்அருந்தகங்களில்தான் பெரும்பாலும் காணமுடிகிறது.


தேனீர் அருந்தக உரிமையாளர்கள் அவர்களுக்கேத் தெரியாமல் தமிழ்வளர்க்கிறார்களே என்று ஒரு மகிழ்ச்சி. அதற்காக அனைவரும் புராணகால தமிழ்பேச வேண்டும் என்று அர்த்தமல்ல. நம்மிடையே உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தமிழை இறவாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமைநமக்கிருக்கிறது.

நமக்குத் தெரிந்த நல்ல தமிழில் தொடர்ந்து பேசினால்உயிர்வலியில் துடிக்கும் தமிழுக்கு குருதிகொடுத்ததற்குச் சமம். இன்றைய காலகட்டத்தில்தமிழுக்கு குருதி கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. ஆம்முதன் முதலில் தமிழுக்காக மட்டும் ஒருதொலைக்காட்சி ஒளிபரப்பு (இரண்டரை ஆண்டுகாலமாக). ஆனால் அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும்தொடர்ந்து பார்க்க நம்மில் யாருக்கும் ஆர்வமில்லை.


காரணம் அதில் திரைப்பட நிகழ்ச்சிகளோ, பொழுதுபோக்கு அம்சங்களோஇல்லை. இதில் பலரால் விரும்பப் படும் நிகழ்ச்சி "சொல் விளையாட்டு". அதன்தொகுப்பாளர்கள் பேசும் தமிழ் இனிமையாகத்தான் இருக்கிறது. அந்ததொலைக்காட்சி வேற்று மொழி கலக்காத பொழுதுபோக்கு அம்சங்களை சேர்த்துதமிழுக்கு உயிர் கொடுக்க முயற்சிக்கலாம் (மக்கள் தொலைக்காட்சிக்குநன்றிகள்).


அடுத்து விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியானதமிழ் பேச்சு எங்கள் மூச்சு". என்ன ஒரு அருமையானநிகழ்ச்சி அந்த நிகழ்ச்சியின் மூலம் கூட நம்மால் தமிழ்கற்று கொள்ள முடியும் என்று தோன்றுகிறது. தமிழைப்பற்றி மழலைகள் சொல்லும் விடயங்கள் நம்மில்பலருக்குத் தெரியாமலிருக்கிறது.


அந்த மழலைகளின் தமிழ் உச்சரிப்புகளை கேட்கும்ஒவ்வொருவருக்கும் நாம் ஏன் தமிழை விடுத்து வேற்று மொழியை தேவையற்றஇடங்களில் பேச வெண்டும்? என்ற உணர்வு நிச்சயம் வரும். இது போன்றநிகழ்வுகளும் தமிழார்வம் மிக்க குழந்தைகளும் கொடுத்த மருத்துவ உதவிகளால்தமிழ் உயிர்ப் பிழைத்து மறுபிறவி எடுத்திருக்கிறது. ஆம் "தமிழ் பிறந்திருக்கிறது". அந்த தமிழை குழந்தை போல் பாவித்து வளர்க்க வேண்டிய கடமை ஒவ்வொருதமிழனுக்கும் இருக்கிறது.

எனவே இன்று உலகின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.ஆனால் உலகளாவிய ரீதியில் தமிழ் மொழியின் ஆதிக்கம் குறைந்து வருவது கண்கூடு.எனவே எம் உயிரினும் மேலான எம் தாய் மொழியை கட்டிக்காப்பது எமக்கு தலையாய பொறுப்பு. எனவே தழிழர்களாகிய நாம் அனைவரும் தமிழ்ர்களிடம் தமிழில் கதைப்போம், எமது இளம் சந்ததியினருக்கும் தமிழ் பற்றை ஊட்டுவோம்.

கோவை அ.ராமநாதன்


பி.கு:
இந்தப் பதிவில் நானே எத்தனை இடங்களில் தமிழ்க் கொலை செய்திருக்கிறேன்எனத் தெரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

1 கருத்து:

அ.ராமநாதன் சொன்னது…

வருகை தந்த அனைத்து நல்உள்ளங்களுக்கு என் நன்றிகள் ,தங்களின் கருத்துகள் எனக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது.