தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/05/2010

“நட்பிலும் விஷமும் உண்டு”

ஒரு மனிதன் உயர்வதற்கும் தாழ்வதற்கும் நட்பு ஒரு காரணம் ஆகின்றது.


நட்பு மிக சிறந்த பண்பு ஆனால் அதிலும் நாம் சிறிது கவனம் செலுத்த வேண்டும் . திருக்குறள் மிக தெளிவாக நட்பை பற்றி சொல்லிவிட்டது .


நகுதல் பொருட்டன்று நட்டல்: மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு


நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று; நண்பர் நெறி கடந்து சொல்லும்போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும். 784


நட்பு என்ற உயர்ந்த தத்துவத்தை நாம் இன்று சரியாக புரிந்து
கொள்ள வில்லை, இதன் காரணமாக நட்பினால் நாம் இன்று பல துன்பங்களுக்கும் ஆளாகிறோம் . அதை பற்றி இப்போது பார்ப்போம்.


மிக சிறந்த நட்பிற்கு பலர் உதாரணமாக உள்ளனர். நமது இதிகாசங்கள் நட்பை பற்றி அற்புதமாக கூறியுள்ளன. கர்ணன் தனக்கு திறமை இருந்தும் அவன் சத்ரியன் இல்லை என்று கூறி அதை வெளிகாட்ட விடாமல் தடுத்த பலருக்கு மத்தியில் துரியோதனன் அவனுக்கு ஒரு நாட்டை பரிசளித்து ஒரு அரசன் அக்கி அந்த போட்டியில் கலந்திட செய்தான். அதற்கு பிறகும் துரியோதனன் பல முறை தன் நட்பை கர்ணனுக்கு அற்புதமான முறையில் கட்டியுள்ளான். மகாபாரதத்தில் இவர்கள் நட்பு மிக அற்புதமாக சொல்லப்பட்டிருக்கிறது. இறுதியில் பாண்டவர்கள் தங்கள் சகோதர்கள் என்று தெரிந்த பிறகு நட்பிற்காக தீமையின் பக்கம் போரிடினான் தன் உயிரை விட்டான், அனால் அவனுக்கு தான் பகவான் கிருஷ்னர் விஸ்வரூபத்தை முதலில் காட்டினர்.


இன்று சமுகத்தில் மிக சிறந்து விளங்குபவர்கள் பலர் தங்கள் நண்பனின் உதவியால் தான் இவ்வாறு வந்தோம் என்பதை மறக்காமல் நினைவு கூறும்போது நட்பின் வலிமை நமக்கு அற்புதமாக புரியும்.இதை திரை துறையில் நீங்கள் அதிமாக பார்க்கலாம்.


இன்று உலகம் முழுவதிலும் உள்ள கணினிகளை இயக்கும் சிறந்த software மென்பொருளான விண்டோஸ் என்னும் ஆபரேடிங் சிஸ்டம் வடிவமைத்த மைக்ரோசாப்ட் (Microsoft) என்னும் உலகின் முன்னணி நிறுவனத்தின் ஸ்தாபகர் ஆன பில்கேட்ஸ் தன்னுடைய நண்பனான பால் ஆலென் ஆரம்ப காலத்தில் செய்த உதவிகளால் தான் உலகின் தலை சிறந்த மென்பொருள் (software) கம்பெனியை உருவாக்க முடிந்தது.

 இது தான் நட்பின் வலிமை.

இவ்வாறு நட்பினால் உயர்ந்த எத்தனயோபேரை நாம் உதாரணம் சொல்ல முடியும். ஆனால் அவை அனைத்தையும் நீங்கள் உற்று பார்த்தல் உண்மையான நட்பு என்றால் என்ன என்பது புரியும். இந்த திருக்குறளை படியுங்கள்


அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.


அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும். 787


நண்பன் என்பவன் உங்களை கேடான பாதைக்கு எப்போதும் அழைத்து செல்ல மாட்டான். நீங்கள் அவனை எதாவது கேடான செயல் செயலாம் என்று சொல்லி அழைத்தாலும் அவன் உங்களுக்கு அவ்வாறு செய்ய கூடாது என்று அறிவுரை வழங்கி நல்வழி படுத்துவான். இவ்வாறு இன்றி நீங்கள் விரும்பாவிட்டாலும் கேடான பாதைக்கு அழைத்து செல்லும் ஒருவன் ஒரு காலமும் உங்கள் நண்பனாக இருக்க முடியாது.


பத்தாம் வகுப்பில் நன்றாக மதிப்பெண் எடுத்த ஒரு மாணவன் பனிரெண்டாம் வகுப்பில் மிக மோசமாக மதிப்பெண் எடுத்து சில சமயம் தோல்வி அடைவதையும் நாம் இப்போது காண்கின்றோம். இதற்கு தொண்ணூறு சதவிதம் காரணம் மோசமான நட்பாகத்தான் இருக்கும்.  எனவே பல மாணவர்கள் கூடா நட்பினால் தங்கள் வாழ்கையை இழக்கின்றனர். இரண்டு வருட தவறான நட்பு ஒரு நல்ல மாணவனின் முழு எதிர்காலத்தையும் 
வீனாகி  விடும்.

உண்மையான நண்பன் யார் என்பதை நீங்கள் அடையாளம் கண்டு கொள்வது எளிது. சிரிக்கும் பொது மட்டும் உடன் இருக்காமல் நீங்கள் அழும பொது ஆறுதல் கூறும் ஒருவனே உண்மையான நண்பன். ஒரு அழகிய ஆங்கில வழி சொல்லை பாருங்கள்


"A real friend is one who walks in when the rest of the world walks out."


அதாவது உலகம் உங்களை விட்டு விலகும் பொது எவன் ஒருவன் உங்களை விலகாமல் இருக்கிறானோ அவனே உண்மையான நண்பன்.


அரிஸ்டாடில் என்னும் கிரேக்க தத்துவ ஞானி நட்பை பற்றி ஒற்றை வரியில் சொல்லிவிட்டார், அது என்ன தெரியுமா?.


“துன்பங்களின் பொது பொய்யான நண்பர்களை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம்”.


கார் என்னும் ஊர்தியை கண்டுபிடித்த ஹென்றி போர்ட் இவ்வாறு நட்பை பற்றி அழகாக கூறியுள்ளார்


"My best friend is the one who brings out the best in me."


எனது சிறந்த நண்பன் யார் என்றால், எவன் என்னுள் உள்ள சிறந்தவைகளை வெளியில் கொண்டு வருகின்றனோ அவனே அவன்.


இப்போது நாம் எவ்வாறு நட்பை தவறாக புரிந்து கொள்வதால் அவதி உருகிறோம் என்று பார்ப்போம்.

நம்மை சுற்றி இருப்பவர்கள் அல்லது நமக்கு தெரிந்தவர்கள் எல்லாம் நம் நண்பர்கள் ஆகி விட மாட்டார்கள். இதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.


நம் அலுவலகத்தில் இருப்பவர்கள் பலர் இருக்கலாம் ஆனால் அதில் சிலர் மட்டும் தான் நம் நண்பர்களாக இருக்க முடியும். இங்கே மிக முக்கியமான ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன். இப்போதெல்லாம் முக்கியமாக மிக சிறந்த கல்லூரியில் படித்து software துறைக்கு வரும் நல்ல மாணவர்கள் பலர் மது பழக்கம் இன்றி வந்து பிறகு அலுவலகத்தில் இவைகளுக்கு அடிமை ஆகின்றனர், அதற்கு காரணம் அவர்கள் உடன் இருக்கும்  சிலரே. அதாவது இப்போது பார்ட்டிகளில் மட்டும் குடிப்பதை “social drinking” என்று பெயர் வைத்து அழைகின்றனர், ஆனால் மது ஒரு போதை பொருள் அதை ஒரு முறை நீங்கள் சுவைத்து விட்டால் அது தன் வேலையை காட்டிவிடும், எனவே நீங்கள் சிறிது காலம் பார்ட்டிகளில் மட்டும் குடிக்கும் சோசியல் ட்ரின்கர் என்று சொல்லி கொண்டாலும் பின் ஒரு காலத்தில் நீங்கள் ஒரு குடிகாரர் அக போகிறேர்கள் என்பது உண்மையே. கசப்பாக இருந்தாலும் இது தான் நிஜம். எனவே IT துறையில் உள்ள திறமை மிக்க நண்பர்களே உங்களை கெடுக்கும் நண்பன் பேச்சை கேட்டு சோசியல் ட்ரின்கிங் என்னும் கேடான பழக்கத்திற்கு அடிமை ஆகி விடாதீர்கள்.  நட்பின் பெயர் சொல்லி உங்களை மோசமானவன் ஆக்கும் எல்லாறையும் ஒதுக்கி விடுங்கள், இதன் மூலம் பிற்காலத்தில் நீங்கள் சந்திக்க போகும் பல இன்னல்களில் இருந்து விடுபடலாம்.


மோசமான நண்பர்கள் பட்டாளத்தை காண வேண்டுமா? மோசமான நட்பு எப்படி இருக்கும் என்று நேரில் காண வேண்டுமா? அது மிக எளிது.


 மது கடைகளில் ஒன்றாக கட்டிபிடித்து உருளும் நபர்களும், சூதாட்ட திடலில் அன்பாக பேசி பழகும் அனைவரும், போதைக்கு அடிமை ஆகி சுற்றி திரியும் பலரும், இவர்கள் வாழ்கையில் நட்பினால் கெட்டு போனவர்களே, இவர்கள் நட்பும் கூட அவர்களை போன்று இழிவனதே. இது போன்றவர்களை உங்கள் நண்பர்கள் என்று மறந்தும் கூட வெளியே சொல்லிவிடாதீர்கள், அது உங்களுக்கு மிக பெரிய அவமானத்தை பின்னல் கொண்டு வந்து விடும். இம்மாதிரி பழக்கம் உடையவர்கள் உங்கள் உடன் பனி புரிந்தால் அவர்களிடம் பேசுங்கள் பழகுங்கள், அதாவது சக உழியர் என்ற முறையில், ஆனால் அவர்களுடன் நட்பு வைக்காதீர்கள். அலுவலகம் முடிந்ததும் அவர்கள் யாரோ நீங்கள் யாரோ என்று இருங்கள்... இது உங்களுக்கு படிக்கும் பொது சற்று கடினம் அக தான் இருக்கும் ஆனால் காய்ச்சலுக்கு வலிக்கும் ஊசி போடுவது எவ்வளவு நன்மை தருமோ அது போல இந்த கடின பழக்கம் உங்களை கேடுகளில் இருந்து காப்பாற்றும்.


மிண்டும் சொல்கிறேன் தெரிந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை மிக சரியாக புரிந்து கொள்ளுங்கள். உங்களை யாரிடமும் பழக வேண்டாம் என்று நான் சொல்லவில்லை ஆனால் உங்கள் நலம் விரும்புவோர்களையும், நல்லோர்களையும் நண்பர்களாக ஏற்று கொள்ளுங்கள், மீதம் உள்ள அனைவரையும் தெரிந்தவர்கள், உறவினர்கள், சக ஊழியர் என்று பாகுபடுத்துங்கள்.

(இது நான் பட்ட அவஸ்தைகள்)


இன்று நட்பு என்னும் சொல் மிக இழிவாக பயன் படுத்தப்படுவது வருத்தம் தருகின்றது. ஒரு நண்பன் என்னுடன் இருக்கும் பொது நட்பு பாராட்டும் ஒரு நல்ல நண்பன்  அடுத்த நண்பனிடம் சென்றவுடன் இவ்வளவு நாள் யாரை நண்பன் என்று சொன்னானோ அவனே தற்போது இருக்கும் நட்புடன் என்னை  
இழிவாக  பேசுகிறான். ஆக அவன் காட்டியது உண்மையான நட்பு அன்று , இது போன்று  பணத்துக்காக, சொத்துக்காக உங்களுடன் சுற்றும் இழிவானவர்களை உங்கள் நண்பர் என்று தலை மேல் தூக்கி வைத்து ஆடாதீர்கள் உங்கள் பணம், பதவி, சொத்து போகும் பொது அவர்களும் சென்றிருப்பார்கள், உண்மையை சொல்ல போனால் அவ்வாறான மோசமான நண்பனே கூட உங்கள் பணத்தை எல்லாம் சுருட்டி சென்றிருப்பான். ஆக உங்களிடம் பணம் அதிகம் இருந்தால் நீங்கள் உங்கள் நண்பர்களை தேர்வு செய்வதில் மிக மிக கவனமாக இருங்கள். பணத்துக்காக நண்பனையும் கொலை செய்யும் மோசமான ஆட்கள் இன்று நிறைய உண்டு. நண்பர்கள் தேர்வில் நிதானம் தேவை.


உலகின் தலை சிறந்த மனிதர்கள் உருவாவதற்கு நட்பு மிக முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது, ஆனால் அது நுற்றில் பத்து. மீதம் தொண்ணூறு சதவிதம் நட்பினால் என்ன ஆகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. மீண்டும் சொல்கிறேன் யாரையும் விலக்காதீர்கள் ஆனால் சரியான நண்பனை விட்டு விடாதீர்கள் அவனை அடையாளம் காண்பது எளிதல்ல.


எல்லோருமே எனக்கு நண்பர்கள் தான் என்பவனுக்கு உண்மையில் யாரும் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியாது, அவனுக்கு எல்லாரையும் தெரியும் அவ்வளவுதான். நெருங்கிய நண்பர்கள் என்றால் ஒருவனுக்கு மிக சிலர் தான் இருக்க முடியும் காரணம் ஒரு நண்பன் என்ற நிலையில் இருந்து நெருங்கிய நண்பன் என்ற நிலை வர பல வருடங்கள் ஆகும், ஆனால் எல்லா துன்பங்கிளிலும் தோள்    கொடுத்து, இன்பங்களில் பங்குபெற்று, தோல்வியில் தேற்றி விட்டு, வெற்றியை உற்சாக படுத்தி, சந்தோஷத்தை அதிகபடுத்தும் ஒருவனே உண்மையான நெருங்கிய நண்பன் .


கல்லூரியில் கட் அடிக்க உதபுவனும், பரிட்சையில் பிட் அடிக்க உதபுவனும், பணம் வரும் பொது வருபவனும், பதவிக்காக உடன் இருபவனும் நண்பன் இல்லை.


உண்மையன் நட்பு உங்கள் வாழ்கையை உயர்த்தும், பொய் மற்றும் கூடா நட்பு உங்களை அளித்து விடும்.


நட்பினால் "அமுதம் உண்டு விஷமும் உண்டு" .

உங்கள் கவனத்துக்கு : இதை என் நண்பன் என்னை ஏமாற்றும்  போது நான்(ஏமாறும்) எழுதியது ,  என் நிலைமை  வர வேண்டாம் . 
தொடரும் ....

கருத்துகள் இல்லை: