தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/10/2010

நம் முகம் இப்படியா?

கவிதை ஒண்ணு எழுதலாம்னு நினைச்சேங்க.. சரி எழுதறது தான் எழுதறோம்.. அதையே என் தோழி ஒருவர் அழைப்பிற்கிணங்க "கவிதை சுரங்கத்தில் " போடலாம்னு... எழுதி போட்டாச்சு..

அப்படி என்ன தான் எழுதினேன்னு நீங்க பார்க்க வேண்டாமா??
வளர்ந்து வரும் "கவிதை சுரங்கத்தில் ", சென்ற வாரம், கொடுக்கப்பட்ட தலைப்பு "நம் முகம்"... அதையே முதல் வார்த்தையாய் கொண்டு கவிதை எழுத வேண்டும்..!!
அத்தலைப்பில் நான் சமர்ப்பித்த கவிதை.. இங்கே உங்களுக்காக...!!


உன் எண்ணத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி..
உன் கோபத்தை காட்டினால் குரூரனாவாய்..
எல்லாவற்றுக்கும் சிரித்தாய் என்றால்
ஏமாளி ஆகி போவாய்...


எந்த வித உணர்ச்சியும் காட்டாமல் இருந்தால்
எமட்டன் ஆவாய்..
எரிச்சலைக் காட்டினால்
எதிரி ஆகிப் போவாய்..


எதிர்மறை உணர்ச்சி காட்டினால்..
எள்ளலுக்கு ஆளாகி போவாய்.. சரி பிறகு
எப்படித்தான் என் முகத்தை வைத்திருப்பது?


எழிலாக ஒரு சிரிப்பு..
ஒயிலாக ஒரு நகைப்பு..
சாந்தமாய் ஒரு பார்வை..
சக்தி தருவதாய் ஒரு முறுவல்..
சங்கேதமாய் ஒரு சேதி..
சாஸ்வதமாய் ஒரு புன்னகை..


இத்தனையும் உன் முகத்தில்
இயல்பாய் வருமென்றால் உன்னை போல்
இவ்வுலகில் அதிர்ஷ்டஷாலி யாருளரோ??4 கருத்துகள்:

sangeetha சொன்னது…

கவிதையில் எதார்த்தமாக விஷயங்களை சொல்லி இருக்கீங்க. பாராட்டுக்கள்!

saravanan சொன்னது…

அடேங்கப்பா!!! இந்த முகமும் நல்லா இருக்கே,
வாழ்த்துக்கள்.

suryadeva சொன்னது…

முகம் பலரகம். ஒவ்வொன்ரும் ஒரு ரகம்.

sivakumar சொன்னது…

antha mathiri maugam ulla ponnu
kedacha evvalavu nalla irukkum?