தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

8/03/2010

அன்றோ எழுதிய கவிதை -முழு நிலவே


என் காதல் வானில் ஒரு வெண்ணிலவே
அது வளர்ந்து வந்தது என் நெஞ்சிலே
தாயின் கனிவை கண்டதுன் உறவிலே
அது சேயாய் வளர்ந்த்துன் கருவிலே


ஊடல் மேகம் வந்ததென் சொல்லிலே
கூடல் மழையாய் பொழிந்ததுன் கண்ணிலே
காதல் பசலையும் உன் பிரிவிலே
அது தீரும் நேரமோ நான் உன் அருகிலே


உன்னால் வந்த காதல் நோயிலே
தேய்பிறையாய் தேய்ந்தேனடி பெண்ணிலவே
நோயே மருந்தாம் வள்ளுவன் சொல்லிலே
உன்னில் நான் தெளிந்தேனடி பொன்னிலவே


என் இரவின் இருள் நீக்கும் வெண்ணிலவே
பகலிலும் தஞ்சம் புகுந்தது என் வீட்டினிலே
வானில் தேய்ந்து வளரும் வெண்ணிலவே
என்னோடு இருக்கையிலே என்றும் முழுநிலவே…

இடுக்கை :அ.ராமநாதன்

5 கருத்துகள்:

suryadeva சொன்னது…

தமிழ் நாளிதழை தேனீர்அருந்தகங்களில்தான் பெரும்பாலும் காணமுடிகிறது./

மற்றோர் இடம் முடி திருத்தும் நிலையம்.
மக்கள் தொலைக்காட்சியின் சேவை உண்மையிலேயே பாராட்டுக்குறியது.நல்ல இடுகை. தொடருங்கள்.

palanivel சொன்னது…

நல்ல விஷயங்களை பகிர்கிறீர்கள். மிக்க சந்தோசம் நண்பரே... வாழ்த்துக்கள்....

karuppaya சொன்னது…

நல்ல பதிவு, இன்னும் ஒரு செய்தி மக்கள் தொலைகாட்சியின் அலுவலகத்தினுள் தமிழை தவிர பிற மொழிகளில் பேசினால் 500 ரூபாய் அபராதம்...


மக்கள் தொலைகாட்சிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பல பல....

devipriya சொன்னது…

கலக்கிட்டீங்க!
அருமையான, ஆதங்கமான பதிவு!

sivakumar சொன்னது…

மிக அருமையான பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்

நிறைய வாசிப்பதன் மூலம் எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கலாம்

வாழ்த்துக்கள்