தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

4/08/2010

என் கனவு

அது ஓர் அழகிய நிலாக்காலம்.
கவலை வெயில் சுடாத இனிய இரவைப்போன்றது.
இரவின் மடியில் இனிய உறக்கத்தில் நான்.

என்னைத் தேடி மெல்ல வருகிறது ஒரு கனவு.
ஆனால், கலைகிற கனவுகள் எனக்குப் பிடிப்பதில்லை.
கனவைத் துரத்தி விடுகிறேன் நான்.

அதன் வருகையும் என் துரத்தலும் தொடர்கதை.
கனவைத் துரத்தி துரத்தி கடைசியில் கனவின் பின்னே நான்.
அதனை விரட்டும் முயற்சியில் தொடங்கிய என் துரத்தல்
எப்படியாகினும் அதனை பிடித்து விடுகிற முயற்சியில் முடிகிறது.

ஓர் பௌர்ணமி இரவில் அந்தக் கனவும் கை (கண்?) கூடுகிற‌து.
கனவுக்கே உண்டான இயல்போடு
அது கலைந்து விட முயலும்போதெல்லாம்
நனவாகும் ஆசைகாட்டி அதனை என்னோடு இருத்திக் கொள்கிறேன்.

இறுதியில், தான் நனவாகப் பிறக்கவில்லை
தான் கலைவதற்காக தான் பிறந்ததாக
எனக்கந்த கனவு சொல்கிற‌போது
நான் மரணிக்கிறேன்.

கலைகிற கனவுகள் எனக்குப் பிடிப்பதில்லை.
இப்போதும் என் கனவு கலையவில்லை.
கனவு காண்கையிலேயே,
எனக்கு தான் நிகழ்ந்துவிட்டது…
மரணம்!

கருத்துகள் இல்லை: