தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

4/23/2010

மாற்றமே நிரந்தரம்

அவன் எத்தனையோ முயற்சி செய்தும் , அவளது நினைவுகளில் இருந்த அவனால் மீளமுடியவில்லை. அவளுடன் வாழ்ந்த அந்த நான்கு வருடங்கள் நிமிடங்களாக சென்ற போதும், அந்த பழைய நினைவுகள் இன்று அவனுக்கு நரகமாகவே இருக்கிறது. அந்த நான்கு வருடங்களில் அவர்களிடேயே எத்தனை சண்டைகள், எத்தனை பாச பரிமாற்றங்கள். அவன் அவளை முற்றிலும் நேசித்திருக்கிறான், முற்றிலும் வெறுத்திருக்கிறான். அவர்களின் பிரிவிற்கு பிறகு அவனால் அவளை சிறிதளவும் வெறுக்க முடியவில்லை. அவனுக்குள் எத்தனையோ போராட்டங்களுக்கு பிறகு அவளது திருமனத்திற்கு செல்வது என்ற முடிவை எடுத்தான்.

டிக்கெட் எடுத்து ரயில் வண்டியில் அமர்ந்தான். ரயில் புறப்பட இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தது. அப்பொழுது அவளது நினைவுகள் அவனை ஈட்டி போல் குத்தி அவனது கண்ணிர் சுரபிகளை பெரிதாக்கி கொண்டிருந்தது. என் துயர மனநிலை போல்தான் அவளின் மனநிலையும் துவண்டு வருந்தும் என்று எண்ணி மனம் வருந்தினான். ஆண்கள் பல வழிகளில் அவர்களின் துன்பத்திற்கான ஆறுதல்களை தேடி கொள்ளலாம். ஆனால் பாவம் பெண்கள், அவர்கள் மனதில் எத்தனை ஆழமாக துயரம் புதைந்து கிடக்கிறது. அவளால் எப்படி இந்த வேதனையை தாங்கி கொள்ள முடியும் ? அவள் யாரிடம் வாய்விட்டு அழுது தனது துயரத்தை பகிர்ந்து கொள்ள முடியும்? அவளது நிலையை எண்ணி அவனது மனது மிகுந்த வலி கொண்டது.

ரயிலின் அசைவு அவனை தற்காலத்திற்கு அழைத்து வந்தது. அப்பொழுது திடீர் என்று மின்னல் போல் ஒரு பெண் அவன் எதிரில் வந்து அமர்ந்தாள். அவனை அறியாமலே அவளது அழகு அவனை மதிமயங்க வைத்தது. அவனது உடல் மற்றும் உள்ள உணர்ச்சிகள் அவனது கட்டுப்பாட்டில் இருந்து சிறுது விலகியது. நான்கு ஆண்டு சோக நினைவுகள் நிழலாக மறைய தொடங்கியது. அப்பொழுது பளீர் என்று அந்த நினைவு அவன் மூளை தசைகளில் பரவியது. இப்படித்தான் என் காதலிக்கும் மாற்றங்கள் நேர்ந்திருக்குமோ ? இதைத்தான் கார்ல் மார்க்ஸ் மாற்றங்கள்தான் நிரந்தரமானவை என்று கூறினாரோ ?

இது எனது நண்பன் தன் காதலில் வெளிவந்த  போது அவனால் தெரிந்து கொண்டு எனது கற்பனையில் உருவானது ........

இடுக்கை :அ.ராமநாதன் 

கருத்துகள் இல்லை: