தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/06/2010

முயற்சி திருவினை ஆக்கும்

வெற்றிக்கு மிக முக்கிய தேவைகளில் ஒன்று முயற்சி. உலகத்து மனிதர்களை இரு வகையாக பிரிக்கலாம். முயற்சி செய்பவர்கள்; முயற்சி செய்யாதவர்கள். சற்று யோசித்தால் முதல் வகை மனிதர்கள் வெற்றியாளர்களாகவும், அடுத்த வகை மனிதர்கள் சாதாரண மனிதர்களாகவும் இருப்பதை உணரலாம்


திருக்குறளில் வள்ளுவர் முயற்சி, சோம்பேறித்தனம் இவை பற்றி பொருட் பாலில் மீண்டும் மீண்டும் எழுதி உள்ளார்.


முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.


“முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்”.


எடிசன் பற்றி வாசித்துள்ளீர்களா? வாழ்க்கை முழுதுமே ஆராய்ச்சி, ஆராய்ச்சி என செலவிட்டு இவர் கண்டுபிடித்த விஷயங்கள் தான் எத்தனை.. எத்தனை.. ? எவ்வளவு முயற்சி அதற்கு அவர் எடுத்திருக்க வேண்டும்? அநேகமாய் அவர் கண்டு பிடித்தவற்றை விட பல மடங்கு அதிகமாக அவர் அந்த முயற்சிகளில் தோற்றிருக்க கூடும்.

CA, ACS, ICWA போன்ற கோர்சுகள் படிப்பவர்களை கவனித்து பாருங்கள். இந்த தேர்வுகளில் ஒரு குருப்பிற்கு மூன்று அல்லது நான்கு தேர்வுகள் இருக்கும். இவற்றில் ஒன்றில் பெயில் ஆனாலும் அனைத்து பேப்பர்களும் எழுத வேண்டும். இந்த கோர்சுகள் படிப்பவர்களில் ஒரு முறையாவது இப்படி பெயில் ஆகி அனைத்து பேப்பர்களையும் மறுபடி எழுதாதவர்கள் மிக சில பேர் தான். இப்படி மறு படி மறு படி எழுதி பாஸ் ஆகின்றனர் சிலர். பலரோ தொடர்ந்து முயற்சி செய்ய மனமின்றி வேறு படிப்புகள் பக்கம் திரும்பி விடுகின்றனர். முயன்றவர் வெல்கின்றனர்.. முயல மனமில்லாதோர் சிறு வேலைகளில் சேர்ந்து தங்களை திருப்தி செய்ய முயல்கின்றனர்.

எனக்கு தெரிந்த இரு குடும்பங்களின் கதை சுருக்கமாக சொல்கிறேன்.


முதல் குடும்பத்தில் ஆறு பெண்கள். கணவர் சாதாரண வேலை தான். ஆனால் அதன் பின் மாலையில் பார்ட் டைம் வேலை பார்த்தார். மனைவி இவருக்கு பெரும் உறுதுணை. சிறுக சிறுக சேர்த்து அனைத்து பெண்களையும் படிக்க வைத்தனர். அனைவருக்கும் சென்னையில் சொந்தமாய் வீடு வாங்கினர். ஒவ்வொருத்தருக்கும் 25 பவுன் நகை போட்டு திருமணம் செய்து தந்தார்கள். பெண்கள் அனைவரும் வேலை பார்க்கின்றனர். மிக சாதாரண குடும்பமான அவர்கள் அடுத்த generation-ல் சற்று மேலே வந்துள்ளனர். அந்த தந்தையின் உழைப்பை நினைத்து பாருங்கள்!! இன்றைக்கும் அவர் உழைத்து பேரன் பேத்திகளுக்கு நகை போன்றவை வாங்கி தருகிறார்!! உழைப்பு!!


அடுத்த குடும்பம்: இவர்களுக்கு ஒரே பெண். கணவர் சொந்தத்தில், சிறு வயதிலேயே ஒரு பெண் அனாதையாய் நின்றது. அந்த பெண்ணை எடுத்து வளர்த்து படிக்க வைத்தார். மனைவி உள்ளிட்ட மற்ற உறவினருக்கு விருப்பம் இல்லா விடினும் அந்த பெண்ணை நன்கு படிக்க வைத்து வேலை வாங்கி தந்து திருமணம் செய்து தர வேண்டும் என உறுதியாய் இருந்தார். அவ்வாறே செய்தும் முடித்தார். இந்த திருமணம் சென்ற போது நான் நெகிழ்ந்து போயிருந்தேன். இப்படியும் மனிதர்கள் உள்ளனரா என!!


"கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்க படும்; தேடுங்கள் கண்டடைவீர்கள்" இவை இந்து, இஸ்லாம், கிறித்துவ மத புனித நூல்கள் அனைத்தும் சொல்கிற விஷயம்.


ஒரு புத்தகத்தில் படித்த விஷயம் ,அந்த ஆசிரியர் ஒன்று சொல்வாராம். " ஒரு விஷயத்தை சரியாக செய்து முடிப்பது தான் நம் வேலை; நமக்கு பிடித்தமான ரிசல்ட் வந்தால் அது ஒரு போனஸ் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்!”. எத்தனை உண்மையான வார்த்தைகள்!!


நமக்கு ஒரு பெரிய இலக்கு நிர்ணயம் செய்த பிறகு அதனை அடையும் வழியில் சின்ன சின்ன விஷயங்கள் கூட நாம் நினைத்த படி தான் நடக்க வேண்டும் என எண்ண முடியாது. சில விஷயங்கள் நாம் நினைத்ததற்கு மாறாகவும் நடக்கலாம். ஆனால் நாம் நினைத்த final objective நிறைவேறும் வரை நாம் பல்வேறு வழிகளில் முயல வேண்டும்.


இன்னும் சொல்ல வேண்டுமெனில் எந்தவொரு விஷயத்திலும் நமது பங்கை நாம் சரியாக செய்து விட வேண்டும்; அது மட்டும் தான் நம்மிடம் உள்ளது; மற்றவர்கள அதை பார்த்து என்ன விதமாக react செய்வார்கள், அதற்கு என்ன வித பலன் கிடைக்கும் இவை எல்லாம் நம் கையில் இல்லை; நம் பங்கை முடித்து விட்டு, பிறகு எது நடந்தாலும் நாமும் spectaror மாதிரி ரசிக்க வேண்டியது தான்.
தேர்வுக்கு
முந்தைய வாரத்தில்
தலையணை நனைய
பயந்து அழுதிருக்கிறேன்..


பிரச்னைகள்
விஸ்வரூபம் எடுக்கையில் எல்லாம்
விக்கித்து நின்றிருக்கிறேன்..


என்றாலும் கூட
நான் நீந்துகிறேன்..
தேர்வுகளை வெல்கிறேன்


முயற்சி தரும் சுகத்தில்
மறந்து  வாழ்கிறேன்...


இது எனது  எழுத்து மட்டுமல்ல என் வாழ்க்கையும் கூட

தொடங்கிய எந்த விஷயமும் முடிகிற வரை முயற்சி என்பது தொடர வேண்டும். அலுவல் வேலையாகட்டும்,சொந்த வேலையாகட்டும் முடிக்காத விஷயம் ஒரு தீயை அணைக்காமல் விடுவது போல் தான். அது மிகுந்த கெடுதலே செய்யும்.


போலவே ஒரு விஷயத்தை முடிக்காமல் வைத்திருப்பது மனதில் ஓரத்தில் எப்போதும் தங்கி உறுத்தி கொண்டே இருக்கும். இது நமது energy -யை drain செய்து விடும். இதற்கு ஒரே மருந்து அந்த விஷயத்தை தொடர்ந்து, இறுதி வரை எடுத்து சென்று முடிப்பது தான்!!

1 கருத்து:

sunnar87 சொன்னது…

iya, naan kadhai yezhudhavendum yendru aasai padugiren adharku neengal than udavi seyya vendum