தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/10/2010

துறவியாகிவிடுவேனோ என பெரியார் ,அண்ணா கடிதத்தில்.....

  பேரண்புடைய பெரியார் அவர்கட்கு, வணக்கம்.
          என் உடல் நிலை நல்லவிதமாக முன்னேறி வருகிறது. வலியும் அதற்கு காரணமாக இருந்த நோய்க் குறியும் இப்போது துளியும் இல்லை. பசியின்மையும், இளைப்பும், இருக்கிறது. டாக்டர் மில்லரின் யோசனைப்படி, இத்திங்கள் முழுவதும் இங்கிருந்துவிட்டு நவம்பர் முதல் வாரம் புறப்பட எண்ணியிருக்கிறேன். இங்கு ராணி, பரிமளம்,செழியன்,ராஜாராம்,டாக்டர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்து கனிவுடன் என்னைக் கவனித்து கொள்கிறார்கள். சென்னை மருத்துவமனையிலும்,விமான தளத்திலும் தாங்கள் கவலையுடனும், கலக்கத்துடன் இருந்த தோற்றம், இப்பொதும் என் முன் தோன்றியபடி இருக்கிறது. ஆகவே தான் கவலைப்பட வேண்டியதில்லை. முற்றிலும் நீங்கிவிட்டது என்பதனை விளக்கமாக தெரிவித்திருக்கிறேன். தங்கள் அன்பிற்கு என் நன்றி. தங்கள் பிறந்த நாள் மலர் கட்டுரை ஒன்றில் மனச் சோர்வுடன் துறவியாகிவிடுவேனோ, என்னவோ, என்று எழுதியிருந்ததைக் கண்டு மிகவும் கவலை கொண்டேன். தங்கள் பணி, மகத்தான விழிப்புணர்ச்சியை சமூகத்தில் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை மக்களுக்கு கிடைத்திருக்கிறது. எதிர்பாராத வகையில், இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்த சமூக, சீர்திருத்தவாதிக்கும், கிடைத்ததில்லை. அதுவும் நமது தமிழ்நாட்டில். ஆகவே சலிப்போ, கவலையோ துளியும் தாங்கள் கொள்ளத் தேவையில்லை. என் வணக்கத்தை திருமதி. மணியம்மையார் அவர்களுக்கு தெரிவிக்கவும்.
அன்பு வணக்கங்கள்
தங்களன்புள்ள
அண்ணாதுரை.நியூயார்க் 10/10/68

கருத்துகள் இல்லை: