தங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................

11/11/2010

பயணிப்பதாய் நினைத்தேன் .......

இதுவரை தனியாகத்தான்
பயணிப்பதாய் நினைத்தேன் ..
அந்த நினைப்பின் துணிச்சலில்
செய்ய நினைத்ததெல்லாம் செய்து கொண்டு..
ஆட்டமெல்லாம் ஆடி..
கண்டதை தின்று ..
ஊதாரியாய் ஊரை சுற்றி
கர்ண கடூரக் குரலில்
அனைவரையும் மிரட்டி ..
எல்லாம் முடித்து
திரும்பிப் பார்க்கையில்..
பாதையின் ஒரு எல்லையில்
என்னைக் கடந்து போனவர்கள்
அவர்கள் சிரிப்புடன்.,.
வெட்கத்துடன் திரும்பிப் பார்த்ததில்
நடந்து வந்த வழி எங்கும் சிதறிக் கிடந்தன
என்னுள் ஒளிந்திருந்த  
என் இயல்புகள்!

கருத்துகள் இல்லை: